பக்கம்:பொன் விலங்கு.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - 615

ஏது? அவருடைய பாதங்களை இந்தக் கண்களால் அருகில் நின்று ஒருமுறை பார்க்கவும் முடியாத கொடும் பாவியாகி விட்டேனே நான்?" - .

"கவலைப்படாதீர்கள் அக்கா! உங்களுடைய செளபாக் கியத்தை உங்களுக்கு மிக அருகில் வரவழைக்கிறேன் நான். நீங்களே அவரைத் தேடிக்கொண்டு பார்க்கப்போனால் இந்த ஜமீன்தாரும் கண்ணாயிரமும் உங்களைக் கொன்று போட்டு விடுவார்கள். அதனால் என் தோழி மகேசுவரியிடம் நானே சொல்லியனுப்பிச் சத்தியமூர்த்தி சாரை இன்னும் இரண்டு மூன்று நாளில் இங்கு இந்த வீட்டுக்கு வரவழைக்கிறேன். தன் மாணவியாகிய என்னைப் பார்த்துவிட்டுப் போக வருவது போல் இங்கு வருவார் அவர். அப்போது நீங்கள் அவரைக் கண் குளிர உங்களுக்கு மிக அருகில் பார்க்கலாம். பேசலாம். உங்கள் கடிதத்தைப் பற்றியும் விசாரிக்கலாம்.'

"இந்தப் பாவிகள் இருக்கிற நரகத்துக்கு அவர் வருவாரா பாரதி?" -

"கட்டாயம் வருவார் வரச்செய்வது என் பொறுப்பு அக்கா! கல்லூரியிலேயே மாணவ மாணவிகளிடம் அன்பும் கருணையும் நிறைந்த விரிவுரையாளர் அவர் ஒருவர்தான் அக்கா அன்று தமிழ் வகுப்பில் நான் உடல் நலமில்லாமல் சோர்ந்து காணப்பட்ட போதுகூட அவராகவேதான் பரிவோடு என்னைப் பார்த்து 'வீட்டுக்குப்போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அப்படிப்பட்டவர் நான் என் உடல் நிலையைச் சொல்லியனுப்பினால் ஒரு முறைக்கு விசாரித்துப் போவதற் காகவாவது நிச்சயம் வருவார்..." .

பாரதி இப்படிக் கூறிக்கொண்டிருக்கும் போதே மோகினிமனக் கண்களில் சத்தியமூர்த்தி அங்கு வருவது போலவும் பாரதியின் அறையில் நுழைந்து தன் மாணவியாகிய அவளுடைய உடல்நலனை விசாரிப்பது போலவும் அப்போது தான் காப்பியோடு அந்த அறைக்குள் புகுந்து அவரை திகைக்க வைப்பது போலவும் உல்லாசமாகத்தனக்குத்தானேகற்பனைசெய்யத்தொடங்கிவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/617&oldid=595881" இலிருந்து மீள்விக்கப்பட்டது