பக்கம்:பொன் விலங்கு.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 பொன் விலங்கு

வருந்தினாள். மோகினியின் மகிழ்ச்சிக்காகத் தன்னையும் தன் ஆசைகளையும்கூட வெளிப்பட நஷ்டத்தைக் காண்பித்துக் கொள்ளாமலே அந்தரங்கமாகத் தியாகம் செய்துவிட்டு அவள் பொருட்டுச் சத்தியமூர்த்தியை அங்கு வரவழைத்த பாரதி அது எப்படியோ அசம்பாவிதமாக முடிந்து மோகினியைத் துரதிர்ஷ்டசாலியாக்கி விட்டதை எண்ணி எண்ணி நிலை கொள்ளாமல் தவித்தாள்.

உள்கூடத்து ஊஞ்சல் கம்பியைப் பற்றிக்கொண்டு சத்தியமூர்த்தி அந்த வீட்டிலிருந்து நடந்து வெளியேறிச் சென்ற வழியையே வெறித்துப் பார்த்துக் கண்ணிர் மல்க நிற்கும் மோகினியைக் கண்டு மனம் ஒரு நிலை கொள்ளாமல் பரிதாபமுற்றாள் பாரதி, மோகினியோ அப்போது அதற்குமுன் எப்போதுமில்லாதபடி மனம் இடிந்து போயிருந்தாள். சத்தியமூர்த்தியையும் தன்னையும் விலக்கிப் பிரிக்கும் மெல்லிய வேற்றுமை வலை ஒன்றை விதி தங்களுக்கிடையே அந்த விநாடியிலிருந்து தொடங்கி மிக வேகமாகப் பின்னிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. அவர் கடுமையாகவும், தீரமாகவும் மனம்மாறும்படி அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் அன்று அங்கே தற்செயலாக நேர்ந்து விட்டதையும், சந்தர்ப்பம் தனக்கெதிராக சதி செய்து விட்டதையும் எண்ணி மனம் நொந்து போயிருந்தாள் அவள். அப்போது ஊஞ்சல் கம்பிகளைப் பற்றிக் கொண்டிராவிட்டால் நிற்கவே சக்தியிராது போன்ற பலவீனத்தை உணர்ந்திருந்தாள் மோகினி, தன்னை வெறுத்துவிட்டு வெளியேறுகிற சத்திய மூர்த்தியைப் பின்தொடர முடியாமல் ஊசலாடும் மனமும் ஒய்ந்து தளரும் கால்களுமாகத் துவண்டு நின்றபோது தான் அப்படியே யுகம் யுகமாக அவரிடமிருந்து பின் தங்கி நின்று விட்டதுபோல் அத்தனை பெரிய சலிப்பு வாழ்க்கையின் மேல் அவளுக்கு ஏற்பட்டது. தன்னைப்போல் துர்ப்பாக்கியசாலி வாழ்க்கையில் வேறொருவரும் இருக்க முடியாதென்றும் அப்போது அவளுக்குத் தோன்றியது.

உள்ளே அறையிலிருந்த பாரதி சிறிதுநேரம் கழித்து டிரைவர் முத்தையாவிடம் சொல்லிக் கோபத்தோடு இரைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/626&oldid=595891" இலிருந்து மீள்விக்கப்பட்டது