பக்கம்:பொன் விலங்கு.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 பொன் விலங்கு

என் பொறுப்பு. மறுபடியும் என் தோழி மகேசுவரியை வரவழைத்து, அவளிடம் விவரமாக உங்கள் கைப்படவே கடிதம் எழுதிக் கொடுத்து சத்தியமூர்த்தி சாரிடம் கொண்டு போய்ச் சேர்க்கச் சொல்கிறேன். அவர் மனம் சமாதானம் அடையும் விதத்தில் அந்தக் கடிதத்தை நீங்கள்தான் அக்கா எழுத முடியும். உடனே எழுதுங்கள். நான் இப்போதே டிரைவர் முத்தையாவிடம் சொல்லி மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைக்கிறேன்' என்று பாரதி ஆறுதலாக யோசனை கூறியபோது, மோகினி அந்த வார்த்தைகளை நம்பி அப்படியே சத்தியமூர்த்திக்கு மிகவும் உருக்கமாகத் தன் நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதலானாள். கடந்த சில நாட்களில் தான் உடல் நலமின்றிக் கிடந்தபோது மோகினி தனக்குப் பணிவிடை செய்த விசுவாசத்தினாலும், இந்தப் பரந்த உலகில் சத்தியமூர்த்தியைத் தவிரத் தனக்குத் துணை என்று வேறு யாருமில்லாமல் உள்ளும் புறமும் அந்த ஒரே உயிர்த் துணையையே உணர்ந்து தவிக்கும் மோகினியின் பரிசுத்தமான காதலை மதித்துத் தானே தன்னைத்தியாகம் செய்துகொள்வதென்று பாரதி முடிவு செய்திருந்ததனாலும் தன்னுடைய கஷ்டத்தை மறந்து மோகினியின் காதல் வெற்றி பெற மட்டுமே அவள் பாடுபட்டாள். மகேசுவரி தங்கரத்தினத்தை வரவழைத்து மோகினி எழுதிய கடிதத்தை லேக் அவென்யூவிலுள்ள சத்தியமூர்த்தியின் அறைக்குக் கொடுத்தனுப்பிய போதும், அப்படிக் கொடுத்தனுப்பிய பின் மோகினிக்கு ஆறுதல் கூறியபோதும் சத்தியமான அந்தக் காதல் வெற்றி பெறப் பாடுபடுகிற ஒரே ஒரு புண்ணியமாவது தனக்குக் கிடைக்கட்டுமென்ற பரந்த மனப்பண்புதான் பாரதியிடமிருந்தது. ஆனால் எல்லாருக்கும் மேலாக விதியோ வேறுவிதமாக இருந்தது.

பாரதியை விசாரித்துவிட்டுப் போக வந்த இடத்தில் மோகினிக்கும் ஜமீன்தாருக்கும் மணமாகிப் புதுமணத் தம்பதிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டதுபோல் அலங்காரமாக எடுத்து ஆடம்பரமாக மாட்டப்பெற்ற புதிய பெரிய படத்தை அங்கே பார்த்தாலும் தன்னுடைய சகலவிதமான அவநம்பிக்கை களிடையேயும் ஒரே ஒரு நிச்சயமாக இருந்த அவளே நிச்சயமற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/628&oldid=595893" இலிருந்து மீள்விக்கப்பட்டது