பக்கம்:பொன் விலங்கு.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

636 பொன் விலங்கு

மனிதனுடைய அழுக்குக் கைகள் தொட்டுப் பறிப்பதற்கு முன்பு, மண்ணில் தாங்களாகவே உதிர்ந்து தங்கள் தூய்மையைக் காப்பாற்றிக் கொண்டுவிடும் பவழ மல்லிகைப்பூவைப்போல் தூயவளென்று முன்பு அவளை அவன் நினைத்திருந்தான். இன்றோ படத்தில் மணக்கோலத்தோடு ஜமீன்தாருடன் சிரித்துக் கொண்டு நின்ற நிலையிலும், நேரில் அவருக்கு உபசாரம் செய்து கொண்டிருந்த நிலையிலும் பிரத்தியட்சமாக அவளைப் பார்த்துவிட்ட பிறகு, அவன் நினைப்பில் அவளே ஒர் பெரிய அழுக்காகத் தோன்றினாள். ஷி வாக்ஸ் இன் பியூட்டி என்ற கவிதையை முன்பு கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்குக் கற்பித்தபோது, அதில் வருகிற 'ஹெள பியூர்?' (எவ்வளவு பரிசுத்தம்?)"ஹெள டியர்? (எவ்வளவு கனிவு?) என்ற வரிகளைத் தான் மோகினியின் ஞாபகத்தோடு மனம் நெகிழ்ந்து விளக்கிச் சொல்லியதையும் அந்த நெகிழ்ச்சியில் வகுப்பிலுள்ள மாணவ மாணவிகளெல்லாம் மயங்கியதும் இன்று அவனுக்கே வெறும் பொய்யாகத் தோன்றுகின்றன; இன்னும் நன்றாகச் சொல்லப் போனால் அவளும் அவளோடு தொடர்புடைய எல்லாமுமே வஞ்சகமாய்ப் பொய்யாய்த் தோன்றுகின்றன. - - ‘. .

சந்திக்கிறோம் அறிகிறோம், அன்பு செய்கிறோம், பின்பு பிரிகிறோம். மிகப் பல மனித இதயங்களின் சோகக் கதை இதுதான் என்ற பொருளில் 'டு மீட், டு நோ, டு லவ் அண்ட் தென் டு பார்ட், இஸ் திஸ்ேட் டேல் ஆஃப் மெனி எ ஹ்யூமன் ஹார்ட் என்பதாகக் கால்ரிட்ஜ் ஒரு கவிதை பாடியிருக்கிறான். அந்தக் கவிதைதான் இன்று இந்த விநாடியில் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. மோகினியின் நினைவுகள் என்னும் தூய நறுமண மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அவனுடைய ஞாபகமாலை இப்போது சிதைந்து அறுந்து போய் விட்டது. அந்த நளின் நறுமண மாலை மணம் பரப்பிக் கொண்டிருந்த இடத்தில் இப்போது வெறுப்பும், ஏமாற்றமும், அவநம்பிக்கையும் அருவருப்பும் வந்து குடிகொண்டிருந்தன. உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/638&oldid=595904" இலிருந்து மீள்விக்கப்பட்டது