பக்கம்:பொன் விலங்கு.pdf/650

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 பொன் விலங்கு

முழுமையாக நம்பிக்கையில்லை. குணத்தையும், ஒழுக்கத்தையும் பேச்சில் எழுத்தில் கொண்டாடுகிறார்கள்; பணத்தையும் பதவியையும் செல்வாக்கையுமே வாழ்க்கையில் நடைமுறையில் மதித்துப் பயப்படுகிறார்கள். புராதனமான ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தங்களுடையதாகச் சொல்லி மற்ற நாட்டாரிடம் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். சொந்த நாட்டிலோ அன்றாட வாழ்வில் வெறும் காரியவாதிகளாக-லோகாயதவாதிகளாக வாழ்கிறார்கள். இலட்சியத்தில்-நினைப்பளவில் கடவுளைப் பக்தி செய்கிறார்கள். நடைமுறையில் கண்முன்னால் கண்முன்னால் செளகரியமுள்ள மனிதனைப் பக்தி செய்து மடிகிறார்கள். இந்தத் தேசத்தின் இன்றைய வாழ்க்கையில் வாழவேண்டும் என்கின்ற ஆசைகள் ஒருபுறமும், வாழ்வதற்குரிய செளகரியங்கள் வேறு ஒரு புறமுமாக முரண்பட்டு நிற்கின்றன என்று நவநீத கவி ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாற்றியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் நியூயார்க்கில் நடைபெற்ற அகில உலகக் கவி சம்மேளனத்தில் இந்தியாவிலிருந்து தமிழ் நாட்டின் பிரதிநிதியாகப் போய்க் கலந்துகொண்டு உலக சமாதானப் பண்ணிசைத்து விட்டுத் திரும்பியபின் தமிழகத்தின் முக்கியமான ஊர்களிலெல்லாம்-அந்தக் கவிஞர் பெருமானுக்கு வரவேற்பளித் தார்கள். அந்தச் சமயத்தில் மதுரையிலும் ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது துன்பப்படுவோர்களின் ஊமைத் துன்பங்களையெல்லாம் சொல்லாய்க் கவிதையாய் உருவாக்கும் அந்தக் கவிஞர் திலகர் திடலில் நடைபெற்ற கூட்டத்தில் உலக அரங்கில் இந்தியாவின் சமூக வாழ்வு எப்படி ஒப்பிடப்படமுடியும்? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு இந்தக் கருத்துகளையெல்லாம் தெரிவித்தார். அன்று அந்தக் கூட்டத்துக்குக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும் போயிருந்தார்கள். அன்று அவர் பேசிய கருத்துகள் எல்லாம் சத்தியமூர்த்தியின் மனத்தில் சிந்தனைகளைத் துண்டியிருந்தன. அந்தக் கருத்துகளை மையமாகக் கொண்டு பலநாள் பல சந்தர்ப்பங்களில் அவன் தன்னுடைய சொந்தச் சிந்தனைகளை வளர்த்திருக்கிறான். டில்லியிலிருந்து திரும்பும்போது பாராளுமன்ற உறுப்பினராகிய மதுரைப் பெரிய மனிதர் வளராத நாடுகளில் ஒன்றாகிய பாரதம் வளர்ந்த நாடுகளைக் கண்டறிவதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/650&oldid=595918" இலிருந்து மீள்விக்கப்பட்டது