பக்கம்:பொன் விலங்கு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொன் விலங்கு

கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கும் சேர்த்துக் கூச்சப்படுவதுபோல் அத்தனை அதிகமான வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக்கொண்டு நாணி நின்றாள்.அந்த இளம் பெண், நாட்டியக் கோலத்தில் அந்த இளம்பெண் மருண்டு நின்றதே ஓர் அழகிய அபிநயமாயிருந்தது. முன்னங்காலைத் தூக்கிக் கொண்டு பாய்வதற்குத் திமிறி நிற்கும் அழகு, அவளிடம் தென்பட்டது. அந்த அழகில் அடக்கமும் இருந்தது. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மடமும், பயிர்ப்பும், கூச்சமும், நாணமும் மிக உயர்ந்த குடும்பத்துப் பெண்களிடம் கூடக் காண அருமையானவை களாயிருப்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான். தேடிக் கண்டுபிடிக்கமுடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய்விடுகிற சமுதாய நஷ்டத்துக்காகச் சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை வருந்தியிருக் கிறான். இன்றும் அப்படி அவன் வருந்த நேரிட்டது.

'அம்மா! நீங்கள் உங்கள் பெண்ணிடம் இன்னும் சிறிது நாகரிகமாகப் பேசலாமே? அப்படிப் பேசினால் இரயிலில் உடன் வருகிற மற்ற பிரயாணிகளும் உங்களை அநாகரிகமாய் நினைத்துக் கொள்ளக்காரணமாயிராது" என்று சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு முகத்தைச் சுளித்தாள் அந்த முதிய அம்மாள்.

"எங்கள் அம்மாவுக்கு நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நாகரிகத்தை எவ்வளவு அட்வான்ஸ்' வாங்கிக் கொண்டு விற்கலாமென்று அவள் நினைப்பாள்....' என்று கீழே தலையைக் கவிழ்த்துக்கொண்டே குமுறலோடு அவனிடம் பதில் பேசியது. அந்த இனிய குரல், . - . . . .

'இன்னொருத்தனுக்குமுன் சந்தி சிரித்துவிடும் போல் இருக்கிறதே என்ற பயத்தினாலோ என்னவோ அம்மாக்காரி பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாள். சண்டை ஒருவிதமாக ஓய்ந்து அமைதியடைந்த நிலைக்கு வந்தது. சத்தியமூர்த்தி மறுபடியும் மேலே ஏறிப்படுத்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கீழ்ப்புறமிருந்து அந்தப் பெரிய அம்மாள் குறட்டைவிடும் ஓசை கிளம்பிற்று. அந்த அம்மாளின் குறட்டைகூட மிடுக்குடனே மிரட்டுவதுபோல் இருந்தது. சத்தியமூர்த்திக்குத் தூக்கம் மறுபடியும் வரவில்லை. படுத்தபடியே புரண்டு கொண்டிருந்தான். கண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/66&oldid=595928" இலிருந்து மீள்விக்கப்பட்டது