பக்கம்:பொன் விலங்கு.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 பொன் விலங்கு

போவது போல் எங்கோ நழுவியிருந்தார். டிரைவர் முத்தையாவோ பாரதியைக் காரில் அழைத்துக்கொண்டு லேக்வியூ ஹோட்டலுக்குப் போயிருந்தான். சமையற்காரர் பின்கட்டில் எங்கோ இருந்தார். மோசம் போய்விடக்கூடாதே என்ற பயமும் பதற்றமும் நடுங்கிடக் குமுறும் சொற்களால் 'உங்களுக்கு என்னவேண்டும்?' என்று குனிந்த தலை நிமிராமல் ஜமீன்தாரைக் கேட்டாள் அவள். - -

'இதென்ன கேள்வி? நீதான் வேண்டுமென்று வைத்துக் கொள்ளேன்' என்று கைகளை நீட்டிப் பல்லிளித்தார் ஜமீன்தார். கொடிய மிருகமாக எதிரில் வந்து நிற்கும் அந்தக் கயமையை அருவருப்போடு துச்சமாகப் பார்த்தாள் அவள். -

'ஏன் அப்படிப் பார்க்கிறே மோகீ? கொஞ்சம் என்னோட வந்து தோட்டத்துப் புல்வெளியிலே சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தா என்ன கொறைஞ்சு போவுதாம்?"

- - - - -

"இரு இரு இந்த வீட்டிலே சேர்ந்து இருக்கிற வரைதானே நீ அந்தப் பொண்ணு பாரதியோடயே இருக்க முடியும்? ஜமீன் வீட்டுக்குப் போனப்புறம் என்னதான் செய்யப்போறியோ?" என்று சொல்லி வயதுக்குப் பொருந்தாமல் சின்னத்தனமாகக் கண் சிமிட்டினார் ஜமீன்தார். 'தூ'வென்று காறித்துப்பிவிட்டு எதிரேவந்து நிற்கும் அந்த மிருகத்தை இலட்சியம் செய்யாமல் கதவைப் படிரென்று அடைத்து உட்புறமாகத் தாழிட்டாள் மோகினி. மீண்டும் கதவு உடைபடுவதுபோல் தட்டப்பட்டது. தானாகக் கை ஓய்ந்து போய்க் கதவைத் தட்டுவதை நிறுத்தட்டும் என்று உள்ளே புலிக்குப் பயந்து புதரில் பதுங்கிய புள்ளி மானாய் நடுங்கிக் கொண்டிருந்தாள் மோகினி, கதவு தட்டப்படுவது நிற்கவே இல்லை.

சிறிது நேரத்துக்குப் பின் ஜமீன்தாரின் குரலோடு கண்ணாயிரத்தின் குரலும் வெளியே கேட்டது. உள்ளே தாழ்ப்பாள் போட்டாலும் வெளியே இருந்து சாவியால் திறக்கிற மாதிரிப் பூட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/662&oldid=595931" இலிருந்து மீள்விக்கப்பட்டது