பக்கம்:பொன் விலங்கு.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 663

சத்தியமூர்த்தி கூறியிருந்த வாக்கியம் அவளுக்கு நினைவு வந்தது. நாட்டரசன் கோட்டைக்குப் பக்கத்தில் ஏதோ கலியாணத்திலே சதிராடப் போய்விட்டுத் திரும்புகிற வழியில் சொகவாசம் கிராமத்தில் சந்தித்த அந்தப்பட்டிக்காட்டுத் தம்பதிகளும் இப்போது அவளுக்கு நினைவு வந்தனர். -

அன்றிலிருந்து இன்றுவரை அந்த எளிய இன்ப வாழ்க்கை அவளுள் ஒரு பொறாமையான முன் மாதிரியாய் உறைந்து கிடக்கிறது. தான் வாழ முடியாமல் தவிக்கும் போதுகளில் எல்லாம் அந்த வாழ்வின் அமைதி அவள் நினைவில் மேலெழுந்து உறுத்தியிருக்கிறது. புகழ், பணம், கலை, ஆடம்பரம் எல்லா வற்றையும் கழற்றி எறிந்துவிட்டு சத்தியமூர்த்தியோடு அந்த மாதிரிச் சிறிய குடிசையில் போய் வாழ்ந்தாலும் அந்த வாழ்வில் நிறைவிருக்கும் என்று அவள் கனவு கண்ட நாட்கள் பல. மீண்டும் மதுரை மீனாட்சி கோவில் கிளிக்கூண்டு மண்டபத்தில் பார்த்த அந்தச் சிறைப்பட்ட கிளி நினைவு வந்தது அவளுக்கு. நினைக்க நினைக்க அவளுடைய இதயம் கனத்தது, அழுகையும் பெருகி வளர்ந்தது. - -

'கூட்டிலிருந்து விடுபட்டால் சுதந்தரம்தான்! ஆனால், சுதந்தரமாகப் பறந்து போகவிட மாட்டார்களே பாவிகள்' என்று அழுகைக்கிடையே தனக்குள் மெல்லச் சொல்லி முணுமுணுத்துக் கொண்டாள் மோகினி, -

விருந்துபசாரக் கூட்டம் முடிந்து பாரதி வந்து கதவைத் தட்டியபோது எழுந்து போய்க் கதவைத் திறந்த மோகினியைப் பார்த்தால் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. அவளிருந்த கோலத்தைப் பார்த்து, "என்னக்கா இது? என்ன நடந்தது?" என்று பதறிப்போய் விசாரித்த பாரதியிடம், " .

"இந்த அழுகைதான் நான் என் பிறவியோடுகொண்டு வந்த சீதனம் அம்மா எல்லாம் என் தலைவிதி" என்றாள் மோகினி. பாரதி மேலும் துண்டித் துண்டிக் கேட்டாள். -

'கண்ணாயிரம், ஜமீன்தார் யாராவது உங்களைக் கோபிச்சுக் கிட்டாங்களா?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/665&oldid=595934" இலிருந்து மீள்விக்கப்பட்டது