பக்கம்:பொன் விலங்கு.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 665

எங்கு வேண்டுமானாலும் புறப்படுங்கள். மறுபடி நீங்கள் திரும்புவதற்குயுகக்கணக்கில் ஆனாலும் நான் அவளைக்காக்கிறேன். வாழ்க்கையில் உங்களுக்காகவும் அவளுக்காகவும் இந்தத் தியாகத்தைச் செய்யவாவது என்னை அனுமதியுங்கள். உங்கள் மனைவி என்ற சட்டபூர்வமான அங்கீகாரத்தோடு நான் அவளை வைத்துக் காக்கிறபோது, ஜமீன்தாரோ, கண்ணாயிரமோ என்னிடம் தொல்லை கொடுக்க முடியாது. தயை செய்யுங்கள். நீங்கள் வெளிநாட்டுக்கு விமானம் ஏறும்போது வெறும் புரொபஸர் சத்தியமூர்த்தியாக மட்டுமே புறப்படாதீர்கள்; மோகினியின் கணவர் சத்தியமூர்த்தியாகப் புறப்படுங்கள்' என்று உள்ளமுருகி வேண்டிக்கொள்ள நினைத்திருந்தாள். இப்படிச் செய்தாலொழிய, நீங்கள் பாக்கிய சாலி அதனால்தான் காதலில் ஜெயித்திருக்கிறீர்கள் அந்த ஜயத்தை இறுதிவரை நிரூபிக்க நான் துணையாயிருக்கிறேன் என்று மோகினியிடம் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாதென்று பாரதிக்குத் தோன்றியது. மோகனி சட்டபூர்வமாகச் சத்தியமூர்த்தியின் தர்ம பத்தினியாகிவிட்டால் அப்புறம் கொடியவர்களான ஜமீன்தாரோ, கண்ணாயிரமோ அவளுக்குத் தொல்லை கொடுக்க முடியாது! நானும் தாராளமாகவும் உரிமையுடனும் இவளைப் பாதுகாத்துக் கொண்டு அவர்களைத் துணிந்து எதிர்க்காலம் என்னுடைய காதல் எந்த இடத்தில் தோற்றதோ அங்கேயே மோகினியின் காதல் வென்றது. அந்த வெற்றியையாவது நான் காத்துக் காப்பாற்றிக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படிக் காப்பாற்றி விட்டால் ஜமீன்தார் தம்மோடு தமது மஞ்சள்பட்டி மாளிகையில் வந்து இருக்கச் சொல்லி மோகினியை வற்புறுத்த முடியாது. எப்படியும் இதை நான் செய்தே ஆகவேண்டும்' என்றுகங்கணம் கட்டிக்கொண்டாற்போல உறுதியாயிருந்தாள் பாரதி. அப்படி சத்தியமூர்த்தி அவளைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ள அழைத்துப் போவதற்கு இணங்கி விடுவாரென்றும் அந்த நற்செய்தியோடு சேர்ந்தே அவர் வெளிநாடு சென்று இரண்டாண்டுகளுக்கு மேல் தங்கப் போகிறதுயரச் செய்தியையும் மோகினியிடம் சொல்லவேண்டுமென்றும் அந்த விநாடிவரை இரகசியமாக வைத்திருந்தாள் பாரதி. ஆனால் அதே நாளில் அதே இரவில் மோகினியும் அந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டு விட்டாளென்றும், அப்படித் தெரிந்து கொண்டதால்

ł

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/667&oldid=595936" இலிருந்து மீள்விக்கப்பட்டது