பக்கம்:பொன் விலங்கு.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 681

போகலாம். டிரைவர் முத்தையாவைக் காரிலேயே உங்களைக் கொண்டு போய்விடச் சொல்கிறேன்' என்று பாரதி பரிவோடு வேண்டினாள். அவன் அதற்கு இணங்கவில்லை.

“உங்கள் அழைப்புக்கு நன்றி! மன்னிக்க வேண்டும். இந்தப் பாதையாக மதுரைக்குப் போகிற காய்கறி லாரி ஏதாவது வரும். அதில் ஏறிப் போய்க் கொள்கிறேன் நான். நீங்கள் வீட்டுக்குத் திரும்புங்கள்." - -

அதற்குமேல் அவனை வற்புறுத்த விரும்பவில்லை அவள். "புரொபஸர், நீங்கள் ஒரு கல்லூரிக்கு மட்டும் புரொபலர் இல்லை! சமூகத்துக்கே புரொபலராகிற தகுதி உங்களுக்கு இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் முடிந்தால் மறுபடி எங்கள் கல்லூரிக்கு வாருங்கள். நீங்கள் என்று வந்தாலும் உங்கள் மாணவியாகவே நான் உங்களை வரவேற்பேன்" என்று நாத் தழுதழுக்கக் கூறிக் கீழே குனிந்து அவன் பாதங்களை வணங்கினாள் பாரதி. அப்படி வணங்கும்போது ஞாபகமாக அதில் ஏற்கெனவே சமர்ப்பணமாகி விட்ட ஒருத்திக்கு மரியாதை செய்வதுபோல் அந்தப் பாதங்களிலிருந்து இரண்டடி விலகித் தன் கைகள் அந்தப் பொன்னிறப் பாதங்களைத் தீண்டி விடாமல் தள்ளியிருந்து வணங்கினாள் பாரதி. சாலையில் ஏதோ லாரி வந்தது. கைநீட்டி நிறுத்தி, 'மதுரையில் கொண்டு போய்விட முடியுமா?" என்று சத்தியமூர்த்தி அதில் இடம் கேட்டபோது அவர்கள் சம்மதித்தார்கள். சத்தியமூர்த்தி முன்புறம் லாரி டிரைவருக்கருகே ஏறி உட்கார்ந்து கொண்டு பாரதிக்கு விடை கொடுத்தான். லாரி நகர்ந்தது.பாரதி பிரமை பிடித்தாற்போல் வெகு நேரம் அந்த இடத்திலேயே நின்று கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருந்தாள். பின்பு இறுதியாக அவன் கால்கள் நின்ற இடத்தைத் தொட்டுக் கண்களில் ஒத்திக்கொண்டு காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பினாள். " ... . . . . . . . . -

இப்பால் லாரி மலைச் சாலையில் வளைந்து வளைந்து கீழிறங்கியது. சாரலும் இருளும் காற்றும் நிறைந்த அந்த இரவில் வாழ்க்கையின் அழகுகள் எந்த இடத்திலிருந்து ஆரம்பமாவதாக முன்பு ஒரு சமயம் அவன் நினைத்துக் கொண்டிருந்தானோ அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/683&oldid=595954" இலிருந்து மீள்விக்கப்பட்டது