பக்கம்:பொன் விலங்கு.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 . பொன்விலங்கு ...என்று அந்தக் கவிதையைப் படிக்க தொடங்கியவன் மேலே. படிக்க முடியாமல் ஞாபகத்தில் அலைமோதும் மோகினியைப் பற்றிய எண்ணங்களினால் கண்களில் நீர் பெருகித் திரையிட்டு மறைத்தது.கள்ளாடுமணமலர்கள் தள்ளாடிச்சரிந்துபுறம்கொள்ளாத கருங்குழலாள் என்ற ஒரே வரியைத் திரும்பவும் நினைத்தபோது தாங்க முடியாத துயரம் அவன் மனத்தைக் கனக்கச் செய்தது. ஜெட் விமானம் உள்ளேயிருப்பவர்களுக்கே அந்த வேகம் தெரியாதபடி நள்ளிரவில் மிக வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. விமானத்துக் குள்ளே மென்மையான நறுமணமும் குளுமையான விளக்கொளியும் இதமாயிருந்தன. ஆகாய விமானப் பயணத்தைப்போல் பூமியின் சுகதுக்கங்கள் ஒட்டாமலே யாராலும் வாழ்ந்துவிடமுடியாது விமானம் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் மறுபடி தரையில் இறங்கியாக வேண்டியிருப்பது போல மனித இலட்சியங்களும் மண்ணின் வாழ்க்கையோடுதான் இணைந்திருக்கின்றன.

வாழ்நாள் முழுதும் நினைத்து வருந்துவதற்குரிய சில துயரங்களும், நினைத்து மகிழ்வதற்குரிய சில மகிழ்ச்சிகளும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் நிச்சயமாக இருக்கும். அவை சத்தியமூர்த்தியின் வாழ்விலும் இருந்தன. பார்க்கப் போனால் சந்தோஷ்மும் மனித மனத்துக்கு ஒரு விலங்குதான். ஏனென்றால் அதையடுத்துத் துக்கம் வரும்போது யாராலும் கலங்காமலிருக்க முடியவில்லை. சத்தியமூர்த்தியின் கண்ணிருக்கும் இன்று மோகினிதான் காரணமாயிருந்தாள். எப்போதோ ஒரு சில சமயங்களில் அவனுடைய மகிழ்ச்சிக்கும் மோகினிதான் காரணமாயிருந்தாள். அவளுடைய ஞாபகம் ஒரு விலை மதிப்பற்ற விலங்காக அவனைப் பிணைத்திருக்கிறது. அறிவும் திறமையும் தோற்றப் பொலிவுள்ள சத்தியமூர்த்தி சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்து மீண்டும் எதிர்காலத்தில் எத்தனையோ பெரிய பெரிய சாதனைகளையெல்லாம் தேசத்துக்காகவும் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/686&oldid=595957" இலிருந்து மீள்விக்கப்பட்டது