பக்கம்:பொன் விலங்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 4 பொன் விலங்கு

அவனுடைய அநுபவங்கள். அவன் படித்திருந்த புத்தகங்களும் பழகியிருந்த நல்லவர்களும் ஒவ்வொரு துறையிலும் இங்கு இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்பதுபோல திடமான அபிப்பிராயங் களை ஆழமாக எண்ணித் தீர்மானம் செய்ய அவனுக்குக் கற்பித்திருந்தாலும் சராசரி உலகில் பல இடங்களில் அவன் தயங்கி நிற்க நேர்ந்தது. பிறர் தன்னை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தான் வாழ முடியாமலிருப்பது தனக்கு ஒரு குறையானால் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தக் குறை ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீருமென்று சத்தியமூர்த்தி நினைத்தான்.

'ஏனென்றால் அடுத்தவன் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தன்மை இல்லாத அப்பட்டமான தியாகிகள் உலகின் எந்த மூலையிலும் இல்லை. அன்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறுப்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பது தான் வாழ்க்கை போலிருக்கிறது' என்று இப்படிப் பலவிதமான சிந்தனைகளின் வேகத்தோடு நடந்து சென்றதில் நடையே தெரியவில்லை. எதிரே வருகிற சந்தில் திரும்பி அடுத்த வீதிக்குள் சிறிது தொலைவு நடந்தால் வீடுதான். எங்கோ கோவிலில் திருவனந்தல் வழிபாட்டுக்கு முன்பாக வைகறையில் வாசிக்கப்படும் மேளமும் நாதஸ்வரமும் அதிகாலையின் இனிய ஞாபகமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் அப்போதே வாசல்தெளிக்கத் தொடங்கியிருந்தார்கள். கிழக்கு வெளுக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது. х

வாயில் படியேறிக்கதவைத்தட்டினான்சத்தியமூர்த்தி. இருமிக் கொண்டே அப்பா எழுந்துவந்து கதவைத் திறந்தார்.

சாயங்கால இரயிலிலேயே உன்னை எதிர்பார்த்தேன்' என்றார்.அப்பா. .

'முடியவில்லை. முதல்நாள் மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ் தவறிவிட்டது. மறுநாள் இண்டர்வ்யூவுக்குத் தாமதமாகி விட்டது" என்று சொல்லிக் கொண்டே சூட்கேஸுடன் உள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/76&oldid=595970" இலிருந்து மீள்விக்கப்பட்டது