பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி , 9 & உண்மையிலே கிளாஸ்லே பிள்ளைங்ககிட்ட அவரு ரொம்ப அன்பாகவும் அளவாகவும் பழகறாருங்க. அவர் மேலே இப்படி ஒரு குற்றத்தைச் சுமத்தி வெளியே அனுப்பிச் சோம்னா யாரும் அவரு இப்ப்டிச் செஞ்சார்னு நம்ப்க்கூட மாட்டாங்க...' - "நம்பறாங்களோ நம்பல்யோ, நான் சொல்றதை நீங்க செய்யுங்க, அவனை எப்பிடியும் உடனே நம்ம ஸ்கூலை விட்டுத் தொலைச்சாகணும்.' . . அப்போது ஜமீன்தாரின் வெறிகொண்ட நிலையை எதிர்த்து வாதம் புரிய முடியாமல் பள்ளி ரைட்டரும். குமாஸ்தாவும் அவர் டிக்டேட்' செய்தபடியே ஒரு * -டெர்மினேஷன் ஆர்டரை எழுதிக் கொண்டு வந்தனர். ஆனால் உள்ளுற அவர்கள் அநுதாபம் என்னவோ சுதர்சனன் மேல்தான் இருந்தது. 1 on . மறுநாள் காலையிலிருந்து பள்ளியில் சூழ்நிலை மிகவும் இறுக்கமாக இருப்பதைச் சுதர்சனன் உணர்ந்தான். அவனைச் சந்தித்தவர்களில் தலைமையாசிரியர், ரைட்டர், குமாஸ்தா யாருமே அவனோடு பேசுவதற்குப் பயப்பட் டார்கள். மாலையில் பள்ளி இலக்கிய மன்ற விழா வேறு இருந்தது. அதில் உரையாற்றுவதற்கு மன்றக்குடி மகபதி அடிகளார் வருவதாக நோட்டீஸ் போர்டில் அச்சிட்டு ஒட்டி விருந்தது. வகுப்புக்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டி ருந்தது. மாலையில் கடைசி இரண்டு பீரியடுகள் கிடையாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. & . சுதர்சனனுக்கு அந்த அடிகளாரை ஓரளவு நன்றாகவே தெரியும். சாமியாராகத் தீட்சை பெற்று மடத்துத் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் வெறும் புலவர் மகபதியாக அங்கங்கே திருக்குறள் அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தவர் அவர். சுயமரியாதை இயக்கத் தில் ஒரளவு ஈடுபாடும் ஐயாவிடத்தில் மதிப்பும் உள்ளவர். சாமியாராக வந்த பிற்கு இதன் காரணமாகவே மகபதி,