பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 5 9. மாகவும் அர்த்தம் சொல்லலாம். எதிர்காலத்திலே ஒரே காரியத்துக்கு இந்த இரண்டு அர்த்தமுமே வரும் என்று: நினைத்தோ என்னவோ இப்படி ஒரு சிலேடைப் பொருளே இதுலே தற்செயலா அமைஞ்சிருக்கு அண்ணே!' - 'சரி நான் வரேன்...எதுக்கும் தேவைப்பட்டா வாங்க. இந்தாங்க என் விளிட்டிங் கார்டு' என்று ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி விட்டு நகர்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் அதை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டான். சிறுமைகளையும் கயமை களையும் கண்டு துடிதுடித்துக்குமுறும் ஓர் இளம் நேர்மை யாளனுக்கு ஏற்படுகிற குமட்டல் அப்போது சுதர்சனனுக் கும் ஏற்பட்டது. . அவன் இளமையில் நம்பிய தலைவர்கள் எல்லாம். முதவில் பஞ்சகல்யாணிக் குதிரைகளாகத் தோன்றிப் பின்பு. மெல்ல மெல்லக் கழுதைகளாகத் தேய்ந்து போயிருந்தனர். அவனுக்குச் சுயமரியாதையைப் பால பாடம் சொல்லிக் கொடுத்த பெரியவர்களே பணத்துக்காகப் பலரிடம் அவ. மரியாதைப்படக் கூடத் தயாராயிருப்பதை அவன் கண். ணெதிரே பட்டவர்த்தனமாகக் கண்டிருந்தான். ஏழை களுக்காகக் கண்ணிர் சிந்தியே அதன் மூலம் பணக்காரர் களாகிவிட்ட பல தலைவர்களுக்குப் பல முகங்கள் இருந்ததை அவன் அறிவான். ஏழைக்கு முன் கண்ணிர்விட ஒரு முகம், வசதியுள்ளவனுக்கு முன் சிரித்து மலர ஒரு முகம், மேடைகளிலே மட்டும் சீர்திருத்தம் பேச ஒரு முகம் -என்று பொய்யான பல முகங்களை வைத்திருக்கும் சமூக விரோதக் கூட்டம் ஒன்று அர்சியலின் பெயராலும் பொது வாழ்வின் பெயராலும் பெருகி வருவதை அவன் கூர்ந்து, கவனித்து மனம் கசந்து கொண்டிருந்தான். காரித் துப்ப லாம் போன்ற குணக் கேட்டையும், பல நிலைக்கேற்றபல்வேறு முகங்களையும் உடைய சில மனிதர்களே எல்லா இடங்களிலும் மாலைகளுக்காகத் தங்கள் கழுத்தை நீட்டிக்