பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¥ 8 6 பொய்ம் முகங்கள் கல்வித் துறையில்தான் இவை மிகமிக அதிகம் சார்: அளவு கடந்த தாழ்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர். அளவு கடந்த உயர்வு மனப்பான்மை. யால் பிறருக்குக் கெடுதல் புரிவோர், போட்டியில் கெடுதல் புரிவோர். பொறாமையால் கெடுதல் புரிவோர், வயிற். றெரிச்சல் படுவோர், நேரே புகழ்ந்து பின்னே தூற்றுவோர் எல்லாரும் இந்தத் துறையில் தான் உண்டு. தன் வளர்ச்சிக்கு, இடையூறு என்றால் பெரிய பொதுவளர்ச்சியைத் தடுக்கும். முயற்சியை மேற்கொள்பவர்கள் கூட இங்கு உண்டு. சென்ற வருஷம் சர்வகலாசாலையில் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறையில் புதிய ஆராய்ச்சிகளை நடத்த என்று. யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஆறுலட்சம் ரூபாய் "கிராண்ட் சாங்ஷன் செய்தது. ஆனால் அந்தத் துறை: யின் தலைவர் புதிய ஆராய்ச்சிகளுக்கான "ஸ்கீமை இது வரை போட்டுக் கொடுக்காமல் இழுத்தடித்துத் தட்டிக்கழித்து வருகிறார். காரணம் துறைக்குள் புதிதாக யாரும் வேலைக்கு வருவதையோ நியமனம் பெறுவதையோ இப் போதிருக்கும் துறையின் தலைவர் விரும்பவில்லை. அவர் கள் எல்லாரும் வந்து துறை பெரிதாக விளர்ந்தால் தம் முக்கியத்துவம் போய்விடுமோ என்று பயப்படுகிறார். பயந்த அறிவாளிகள் தாம் அறிவுத்துறையின் இன்றைய புற்று நோய் போல் இருக்கிறார்கள். வளர்ச்சியைக் கண்டு. பயம். தன்னை விடத் திறமைசாலிகளைக் கண்டு பயம். ப்யப்படுகிறவன் உண்மையான கல்விமானாக இருக்க முடியுமா?" 'இந் தி ய ர் க ளு க் கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாயிற்று. இனிமேல் பயத்தி: விருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். தாழ்வு மனப் பான்மையிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். பொறாமையிலிருந்து சுதந்திரம் வாங்கித்தர வேண்டும். இரட்டை வேஷத்திலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். ஏமாற்றுக்களிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். அந்தச் சுதந்திரங்கள் எல்லாம் கிடைக்கிற வரை