பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்த சாரதி 231 எனக்குத் தெரியாதுங்க! ஒரு வேளை நான் இன்னும் பச்சைக் குழந்தையாகவே இருந்தால் தெரிஞ்சிருக்குமோ என்னவோ? யார் கண்டாங்க?' - - - "ரொம்பத் தமாஷாப் பேசlங்க." சுதர்சனன் டேவிட் கந்தையாவிடமும் புலவர் பூங்கா வனத்திடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது பகல் இரண்டரை மணிக்குமேல் ஆகிவிட்டது. மறுபடி பஸ் பிடித்துத் திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தபோது மாலை ஆகிவிட்டது. -- - . . . . பஸ் ஸ்ட்ாப்பில் இறங்கி அறைக்குச் செல்வதற்காகப் பைகிராப்ட்ஸ் சாலையின் ஜனவெள்ளம் கடற்கரையை நோக்கிப் பொங்குவதை எதிர்த்து மேற்குத் திசையில் அவன் எதிர் நீச்சலிட்டபோது பின்னாலிருந்து, "அண்ணே! சுகந் தானா? என்று ஒரு பழகிய குரல் அவனை விளித்தது. திரும்பிப் பார்த்தால் திருவையாறு கல்லூரியில் புலவர் வகுப்பில் உடன் பயின்ற மதிவாணன் நின்றுகொண்டிருந் தார். அவரை நோக்கிச் சுதர்சனனின் முகம் மலர்ச்சி காட்டியது. . . . . . . 31 மதிவானனைப் பார்த்ததில் பழைய நாட்களின் தினைவுகள் மனத்தில் விரைந்து சுழன்றன. புலவர் கல்லூரி வாழ்க்கை, திருவையாறு காவேரியில் நீச்ச் லடித்தது, பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு, எல்லாம் முறையாகவும். தாறுமாறாகவும் × ・ ・ ளுாபகம் வந்தன. சோமசுந்தரம்' என்ற பெயரை மதிவாணன் என்று. மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். என்ன செய்யிறீங்க மதிவாணன்? செளக்கியமா இருக்கீங்களா? எப்படி வாழ்க்கை நடக்குது?’