பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 8 பொய்ம் முகங்கள் துவாரத்தில் காற்று மிகவும் சுத்தமாகவும் சுகமாகவும்: இருந்தது. . சுதர்சனன் சொன்னான்:- "இந்தக் காத்து ஒண்ணு தான் மெட்ராஸ்லே சுத்தமா இருக்கு. இதுவும் இந்த இடத் திலேதான் இப்பிடிக் சுத்தமா இருக்க முடியுது-ஊருக்குள் ளார நுழைஞ்சிட்டாக் கலப்படமாயிப் போகுது. .. r "கலப்படமே இங்கே ஒரு புதுக்கலாசாரமாவே ஆயிப் போச்சு அண்ணே!' . "புலவர் கல்லுரரியிலே படிக்கறப்ப இருந்த தன்மானம், துணிவு, தீமையான, தவறான விஷயங்களைப் பற்றிய ஆத்திரத்தோடு கூடின அலட்சியம் இதெல்லாம் போயி நீங்க இப்பிடிச் சீத்தலைச் சாத்தனார் வேலை-அதான் புரூஃப் ரீடிங்லே சிக்கினது எனக்குப் பெரிய ஆச்சரியமாகத் தான் இருக்கு?’’ - . . . . . . . "ஆமாண்னே! சித்தலைச் ச்ாத்தனார் மாதிரி எழுத். தானியாலே தலையிலே குத்திக்காத குறைதான்." - "தலைப்புக்காகத் தலையிலே குத்திக்கிட்டுச் செத்தா அம் கூட இப்போ இங்கே யாரும் அதெப்பத்திக் கவலைப் படமாட்டானுவ." * * 32 மதிவாணனைச் சந்தித்த மறுநாள் டேவிட் கந்தையா வைத் தற்செயலாகத் திருவல்லிக்கேணியில் பார்த்தபோது, செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் வேறு யாரையோ தமிழாசிரியராக நியமித்து விட்டதாக அவர் கூறினார். 'ளிக் கமிட்டியில் இருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர். சி.சு. பாலனார் அதற்கு அவனை நியமிக்கக்கூடாது என்று: கூறிவிட்டாராம்.