பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 37 சங்கங்களிலேயே வள்ளுவர் ம்ன்றம்தான் பணக் காரச் சங்கம். அப்படிப்பட்ட பணக்காரச் சங்கத்தில் போப் வள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்கும் ஆவேசப் பேச்சைத் திட்டமிட்டுப் பேசியதுபோல் சுதர்சனன் பேசி யிருந்ததால் விழா முடிவில் ஒரே கசமுசல். அருள்நெறி ஆனந்த மூர்த்திக்குச் சுதர்சனன் மேல் தாங்க முடியாத கோபம். அவனுடைய பேச்சு விழாவையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டதாக நினைத்தார் அவர். - - விழா முடிந்து காரில் திரும்பும்போது, இளையராஜா வேறு அந்தப் பேச்சைக் கண்டித்து, "இனிமே இப்படிப் பேசற ஆட்களை உள்ளே விட்டுட வேண்டாம்” என்று கோபமாகச் சொல்லிவிட்டார், அருள்நெறி ; ஆனந்த மூர்த்தி சரியான தளுக்குப் பேர்வழி. பக்தியையும், பணம் சேர்ப்பதையும் உள்ளங்கையையும், புறங்கையையும்போல் இணைத்து வளர்த்துக் கொண்டு வாழ்ந்த அவர், யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஊரில் நல்ல பெயரெடுத்தவர். வேறு ஜில்லாவிலிருந்து வேலைக்கு வந்த ஒரு.தமிழ்பண்டிட் வள்ளுவர் மன்றத்தின் நீண்ட கால நற்பெயருக்கே கெடுதல் வருகிற மாதிரி பேசிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அடுத்த வருடம் எந்த மூஞ்சியோடு மிராசுதாரர்களிடமும்: வியாபார்களிடமும், பணக்காரர்களிடமும் எப்படி நன் கொடைக்குப் போவது என்ற பயம் அவருக்கு இப்போதே வந்திருந்தது. தமிழாசிரியர் சுதர்சனனுக்கு எதிரான பிர்ச் சாரங்களை அங்கும் இங்குமாக முடிந்தவரை அவர் விரைந்து பரப்பத் தொடங்கியிருந்தார். இந்த அருள் நெறி ஆனந்தமூர்த்தியும், ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வாசு தேவனும் சீட்டாட்ட நண்பர்கள், நகரமுமில்லாமல், கிராமமுமில்லாமல் இரண்டுங்கெட்டான் ஊர் க ளி ல்' பொழுதுபோக்கு ஒரு பெரிய பிரச்னை. ஒரளவு வசதியுள்ள வர்கள் டென்னிஸ் விளையாட, சீட்டாட, அரட்டை - பொ-3