பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 49 சிவராஜின் காபி புராணத்தைக் காதில் வாங்கியபடி சிரித்துக் கொண்டே தலைமையாசிரியரின் மெமோ'வைப் பிரித்தான் சுதர்சன்ன். - - - பள்ளிக்கூடங்களுக்கே உரிய முறையில் அரைத்தாளில் "டைப்' செய்து பழைய உபயோகப்படுத்தப்பட்ட உறை ஒன்றில் மேலே வேறு தாள் ஒட்டி அவனது பெரையும் உத்தியோகத்தையும் எழுதி விலாசமிட்டு அனுப்பப்பட்டி ருந்தது அது. பள்ளி நிர்வாகத்தின் அனுமதி இன்றி அவன் பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதுவதையும், ரேடியோ வில் பேசப் போவதையும் எச்சரித்து எக்ஸ்பிளநேஷன்" கேட்கப்பட்டிருந்தது. அந்த 'மெமோ வில், உடனடியாக அவனுடைய விளக்கத்தை எதிர்பார்த்து ஷோகாஸ்நோட்டீஸ் போல அதை அனுப்பியிருந்தார் தலைமை யாசிரியர், "சரியான காரணம் காட்டாவிடில் உங்களை ஏன் உத்தியோகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யக்கூடாது?என்பதுபோன்ற ஒரு கேள்வியுடன் எல்லா மெமோக்களும் முடிக்கப்படுவது போல்தான் இந்த மெமோவும் முடிந்திருந் திது. ஒன்றும் புதுமையில்லை. சுதர்சனன் அப்படியே அதை மறுபடி உறையிவிட்டுக் கையிலிருந்த புத்தகத்துக்குள் சொருகி வைத்துக் கொண் டான். ஒரு பதற்றமும்.அவனுக்கு ஏற்படவில்லை. என்னது லெட்டரா?'-என்றார் ஓவிய ஆசிரியர் சிவராஜ். * - சுதர்சனன் பதில் சொல்வதற்குள் காபிக்குப் போன பையன் பிளாஸ்கில் காபியுடன் திரும்பி வந்துவிடவே சிவராஜ் அதுபற்றி . மேலே துளைத்தெடுக்கவில்லை. பையனே இரண்டு கண்ணாடி கிளாஸ்களை எடுத்துப் பிளாஸ்கிலிருந்த காபியை ஊற்றினான். அவர்கள் காபியை குடிப்பதற்கு முன் எதிர்பாராத விதமாகத் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியா பிள்ளை உள்ளே நுழைந்தார். சிவராஜ் இன்னொரு கிளாஸ்ை எடுத்துக் காபியை மூன்று அரை கிளாஸ்களாகப் பங்கிட்டு ஒன்றைப் பிச்சாண்டியா