பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பொய்ம் முகங்கள் கவுண்டர் சாமீ' போட்டுப் பேசியது வேறு வாசு தேவனுக்குப் பிடிக்கவில்லை. சுதர்சனனைக் கவுண்டரின் எதிரில் தம் அறைக்குக் கூப்பிட்டு விசாரிக்கத் தலைமை யாசிரியர் விரும்பவில்லை. ஒருவேளை சுதர்சனன் கவுண். டர் முன்னிலையிலேயே தம்மையும் கன்னாபின்னா என்று. பேசினால் நன்றாயிருக்காதே என்று பயந்தார் தலைமை யாசிரியர். கவுண்டர் இப்போது பேசிக்கொண்டிருக்கிற பாணியிலேயே சுதர்சனனிடமும் காட்டமாகப் பேசுவா ரானால் அவன் அவரைப் பதிலுக்கு எடுத்தெறிந்து பேசவும் தயங்கமாட்டான் என்று தலைமையாசிரியர் எண்ணினார். தமக்கு எதிரிலே தாம் அறையில் இருக்கும்போதே அங்கு ஒரு கைகலப்போ, கூப்பாடோ குழப்பமோ, இரசாபாச மாக நடக்கவிடக் கூடாது என்று அவர் ஜாக்கிரதையாக இருந்தார். - - ஆனால் கவுண்டரைச் சமாதானப்படுத்த அவரால் முடியவில்லை. - . . . . . . "நம்ப ஸ்கூல்லியே நம்பளை எதிர்த்து ஒருத்தன் புறப் பட்டிருக்கான்னா அவன் யாருன்னு ஒரு கை பார்த்துட துங்க. முளையிலேயே கிள்ளிடறதுதான் நல்லது. யாரவன் சுதர்சனம் வரச் சொல்லுங்க." வரச் சொல்றேன்! இந்தாங்கோ முதல்லே காப்பி சாப்பிடுங்கோ. அப்புறம் பேசிக்கலாம்' என்று கவுண்டர் . மறுத்தும் கேட்காமல் சொல்லி அனுப்பி வரவழைத்திருந்த காபியைத் தாமே பிளாஸ்கிலிருந்து தம்ளரில் ஊற்றி ஆற்றி அவரிடம் நீட்டினார் தலைமையாசிரியர். கவுண்டர் காபியை வாங்கிப் பருகலானார். தலைமை யாசிரியர் அதுதான் ஏற்ற சமயமென்று படுக்கை அறையில் மனைவிபோல் நிதானமான குரலில் இதமாக அவரிடம் சொல்லலானார்: . . . . - - இந்தத் தமிழ் வாத்தியார் ஒரு மாதிரி ஆள்! நான் எப்பிடிக் கவனிக்கனுமோ அப்படிக் கவனிச்சுக்கறேன். நீங்க எங்கிட்டச் சொல்லிட்டீங்கள்னே? அது போதும்