பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்ம் முகங்கள் முந்திய நாளைப் போலவே தான் அன்றும் நடந்தது . சுதர்சனன் பள்ளி இறுதிப் படிப்பு 'சி' பிரிவு வகுப்புக்கான பிற்பகல் முதல் பாடவேளையை முடித்துவிட்டு-அடுத்த பீரியடு தனக்கு முழுக்க முழுக்க, ஒய்வு என்ற எண்ணத் தோடு ஏற்பட்ட நிம்மதியும் மகிழ்ச்சியுமாக ஆசிரியர்கள் ஒய்வறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய அந்த நிம்மதி ஒரு விநாடி நேரம்கூட நீடிக்க வில்லை. பள்ளி ஊழியன் கையில் ஒரு சிறு துண்டுத் தாளுடன் சுதர்சனனை நோக்கி விரைவாகத் தேடிவந்தான். "என்னது: ஸ்ப்டிடியூட் ஒர்க்கா?’’ "எனக்கென்ன தெரியும் படிச்சுப் பாருங்க சார்!’ துண்டுத்தாளைக் கையில் ல்ாங்கிப் படித்ததும் சுதர்சன னுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது. 'ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்கு என்னால் போக முடியவில்லை. எனக்குப் பதிலாக அங்கே போகவும்: என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார் தலைமை ஆசிரியர். முந்திய நாளும் இதேபோல் ஏதோ ஒரு வகுப்புக்குப் போகச் சொல்லி அவர் சுதர்சனனுக்கு மெமோ அனுப்பிக் கழுத்தறுத்திருந்தார். ஏதோ வேண்டும் என்றே திட்டமிட்டுச் செய்வதைப்போலத் தோன்றியது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒருநாள் பிற்பகலில் தலைமையாசிரியர்