பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா, பார்த்தசாரதி 8 f வந்திங்கன்னா அருள்நெறி ஐயா, இளைய ஜமீன்தார் எல்லாரையும் ஒரு ரவுண்டு பார்க்கலாம்னு நினைக் கிறோம்'-என்றார்கள் வந்தவர்கள், பிள்ளைதான் அதற்குச் சரியான ஆள் என்று அவர்களுக்குத் தோன்றி விருக்க வேண்டும், சுதர்சனனை அவர்கள் கூப்பிட வில்லை. உடனே பிச்சாண்டியா பிள்ளையும் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். வசதியுள்ளவர் களைப் பார்த்துக் கும்பிடுவதிலும், தன்னைகட்டிக் கொள்வதிலும், அவர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் தமிழாசிரியர்களுக்கு இருக்கும் ஆக்கறையைச் சுதர்சனன் கவனித்தான். இன்னும் சங்ககாலத்துப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளாகல்ே அவர்கள் இருப்பதையும் சுதர்சனன் கவனித்தான். ஒரு நிதி வசூல் நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரில் வசதியுள்ள வர்கள் யார் யாரென்று தேடியலைந்து அவர்களை முசுஸ்துதி செய்து பணம் கறந்து இரண்டு நாள் மகாநாடு நடத்துவதைவிட யாருடைய உரிமைகளுக்காகப் போராடு கிறார்களோ அந்தத் தமிழாசிரியர்களிடமே ஒன்றும் அரை யுமாக வசூல் செய்து தன்மானத்துடனே மகாநாடு நடத்த லாமே என்று தோன்றியது. 45 வயதுக்கு மேற்பட்ட பல தமிழாசிரியர்கள். பெரிய மனிதர்களையும், பணக்காரர் களையும் அளவு கடந்து முகஸ்துதி செய்வதைப் பார்த்துச் சுதர்சனன் அருவருப்ப்ே அடைந்தது உண்டு. முகஸ்துதியும் பண்டிதர்களும் கூடப்பிறந்த விஷயங்களோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான். . . . . . . #. வையையாற்று மணலினும் பலநாள் வாழய பேரி, யாற்று மணலை எண்ணினாலும் நின்வாழ் நாளின் பெருக் கத்தை எண்ண முடியாது'-என்பதுபோல் எல்லாம் வாழ்த்திப் பாடியிருக்கும் பல பழம் புலவர்களின் அதே பழைய இரத்தம்தான் இந்தத் தலைமுறைத் தமிழாசிரியர் களின் உடலிலும் ஒடுகிறதோ என்று கூட அவன் நினைத். தது உண்டு. * . . . . . . . . . . . . . ." . . . - ->