பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பொய்ம் முகங்கள் ஜமீன்தார் பக்கத்திலே இருந்த இன்னொரு கமிட்டி உறுப் பினரிடம், "சுத்த எருமைமாடாவில்லே இருக்கான்? -- என்று தெலுங்கில் இரைந்தார். . அது வெளியேறிக் கொண் டிருந்த சுதர்சனன் காதிலும் விழுந்து விட்டது. , - - எனக்குத் தெலுங்கு நல்லாத் தெரியும் சார்! சும்மாத். தமிழிலேயே திட்டுங்க. பரவாயில்லே'-என்று சுதர்சனன் பாதிவழி போனவன் திரும்பி வந்து சொல்லவே ஜமீன்தார் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந்தது.அதற்குள் சுதர்சனன் வெளியேறி விட்டான். . . . . . அதுவரை தலைமையாசிரியர் வாசுதேவன் வாயையே திறக்கவில்லை. குறுக்கேபேசினால் ஜமீன்தாருக்குக் கோபம் வருமோ என்று பயந்து பேசாமல் இருந்தார். * , இந்த ஆள் நம்ப ஜமீன்தார்வாள்கிட்டவே மரியாதை, இல்லாமே எடுத்தெறிஞ்சு பேசிட்டுப் போறானே? இவன் உருப்படப் போறதில்லை’’-என்று அதுதான் சரியான சமயமென்று அருள்நெறி ஆனந்தமூர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பதுபோல் கோள்மூட்டினார்.

பின்னென்ன? விசாரணையாவது ஒண்ணாவது: உடனே டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிவையுங்க. விசாரணை என்ன கேடு? ஆளைச் சீட்டுக் கிழிச்சிட்டு மறு வேலை பாருங்க'-என்றார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த, ஜமீன்தாரின் வலது கரம் போன்ற வேறு ஒரு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர். - -

என்ன ஹெச்.எம். ஒண்ணுமே பேசமாட்டேங்க றாரு?"-என்று தலைமையாசிரியர் பக்கமாகத் திரும்பி னர்ர் ஜமீன்தார். அப்போதுதான் கல்வி இலாகா விதிகள் அடங்கிய மெட்ராஸ் எஜுகேஷனல் ரூல்ஸ் என்னும் முழுப்பெயரின் சுருக்கமான எம்.இ.ஆர். விதிகளைப் புரட்டத்தொடங்கி, யிருந்தார் தலைமையாசிரியர். . ' .