பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

காந்தியடிகளின் உபவாசம்

ஜனங்கள் அஹிம்சா விரோதமான காரியங்கள் செய் தார்கள். சர்க்கார் அடக்குமுறையைக் கையாண்டார்கள். பொருளாதார கிலேமை நாளுக்குநாள் மோசமாய்க் கொண்டு வந்தது. விலைவாசிகள் தலைகால் தெரியாமல் கூடிவிட்டன. பஞ்சமும் நோயும் அதிகரிக்கலாயின. இப் படியாக மாதங்கள் கழிந்துகொண்டு வந்தன. ஆயினும் அரசியல் முட்டுக்கட்டையை நீக்கி அமைதியுண்டாக்க யாதொரு முயற்சியும் நடைபெறவில்லை.

ஆல்ை காந்தியடிகள் ஆகாகான் மாளிகையான சிறைக்குள் புகுந்து ஆறுமாதம் நிறைந்த மறுநாள் அதாவது 1943 பெப்ரவரி 10-ந் தேதி அரசாங்க அறிக்கை ஒன்று வெளிவந்தது. அதைக் கண்டதும் இந்திய மக்கள் மட்டுமன்று, உலகத்தின் பல பாகங்களில் உள்ளவர்களும் திடுக்கிட்டுப் போனர்கள்.

அரசாங்க அறிக்கை, காந்தி அடிகளுக்கும் வைசி ராய்க்கும் கடிதப் போக்குவரத்து கடந்ததாகவும் அதைத் தொடர்ந்து காந்தியடிகள் மூன்று வாரங்கள் உண்ணு விரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தது. காந்தி யடிகள் சாக விரும்பாததால் ஜலத்தைக் குடிக்கும்போது உமட்டாதிருப்பதற்காக ஆரஞ்சுச்சாறு சேர்த்துக் குடிக் கப் போவதாகக் கூறியது எல்லோருக்கும் சிறிது ஆறுதல் அளித்தது. ஆயினும் மாஞ்சஸ்டர் கார்டியன் என்னும் பிரிட்டிஷ் பத்திரிகை கூறியதுபோல இந்திய மக்கள் எல்லோரும் என்றுமில்லாத துக்கத்தில் ஆழ்ந்து போனுர்