பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பொழுது புலர்ந்தது

பெல்லாம் காந்தியுடையதே என்று ஒரே பதிலே கூறி னர்கள்.

உலகத்திலுள்ள இருநூறு கோடிமக்களில் இவரே பெரியவர் என்று அறிஞர் அனைவராலும் போற்றப்படும் உத்தமர். இந்திய மக்கள் எல்லோரும் தெய்வம்போல் எண்ணி வணங்கியும் சொற்கேட்டும் வரும் மகாத்மா, இவருடைய உயிர் ஏனையோர் உயிரினும் காக்கப்பட வேண்டிய உயிரல்லவா? சாதாரண மக்களுக்குக்கூடத் தெரிந்த இந்த உண்மை சர்க்காருக்குத் தெரியாது போன தென்ன? இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் இந்தியா மந்திரியாயிருந்த மாண்டேகு ஐயோ! அரசாங்கம் வெறும் மரக்கட்டையாய் இருக்கிறதே ‘ என்று வருந்தி னரே, அதுதான் காரணமோ?

ஆல்ை இந்த மரக்கட்டை சர்க்காருக்கு உண்மையை அறிந்து காரியம் செய்யத் தெரியாதே தவிர, உண்மையை மறைத்துப் பிரசங்கம் செய்யத் தெரியும். காந்தியடிகள் உண்ணுவிரதம் இருந்து கொண்டிருந்த பொழுது அமரி துரை, வைசிராய் தமது கிர்வாக சபையிலுள்ள இந்திய மெம்பர் அனைவருடைய சம்மதத்தின் பேரிலேயே காந்தி யடிகளின் கோரிக்கையை கிராகரித்ததாக பார்லிமெண்ட் சபையில் கூறினர். அப்படியானல் அவர்களில் மூவர் இந்தக் காரணத்தைக்கூறி ராஜிநாமாச் செய்ததேன்?

இந்த விதமாக சர்க்கார் சகல தேசத்து வேண்டு கோளுக்கும் இணங்காது கிற்கவே எல்லோரும் காந்தியடி களுக்கு என்ன நேருமோ என்று கவலை அடைங் தார்கள். அவருடைய கிலேமையும் அவ்விதமாகவே இருந்து கொண்டிருந்தது. சகல மதத்தாரும் அவரை ரகழித்தருளுமாறு கடவுளே வழுத்தினர்கள். வைத்ய நிபுணர்கள் அநேகர் அவர் பக்கத்தில் இருந்து கண்ணுங் கருத்துமாகக் கவனித்து வந்தார்கள்.