பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

பாதுகாப்புச் சட்ட அமுல்

தேசத்தில் நாளுக்குநாள் உணவுப்பஞ்சம் மிகுந்து கொண்டிருந்தது. வங்காளத்தில் மக்கள் சாலைகளில் பட்டினியால் வாடி இறந்து விழுந்து கொண்டிருப்பதாகச் செய்திகள் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கின. ஆல்ை அதிகாரிகளோ விலைவாசிகளைக் கட்டுப்படுத்தவோ உணவுப் பொருள்கள் தட்டுண்டான இடங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏற்பாடுகளைச் செய் யவோ இல்லாம லிருந்தார்கள்.

“ இப்பொழுதுள்ள சர்க்கார் போலீஸையும் துருப்புக் களேயும் கொண்டு குழப்பங்கள் உண்டானல் அடக்க முடியுமே யன்றி, வேறு எதையும் திறமையாகச் செய்ய முடியாது” என்று ராஜாஜி கூறியது முற்றிலும் உண்மை. நாட்டில் ஜனங்களைப் பட்டினியிலிருந்தும் நோயி லிருந்தும் காப்பாற்றும் அரசியலுக்குப் பதிலாக பிரிட்டிஷ் ராஜ்யாதிகாரத்தை காப்பாற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்ட அரசியலே கடந்து கொண்டு இருந்தது.

மத்திய சட்ட சபையில் உள்நாட்டு மெம்பர் மாக்ஸ் வெல் 1942 ஆகஸ்ட் 11 முதல் டிசம்பர் 31 வரை

துப்பாக்கிப் பிரயோகங்கள் 538 அதில் இறந்தவர் 940 காயம் அடைந்தவர் 1630 கைதியானவர்கள் 60229 தண்டனே யடைந்தவர்கள் 26000

விசாரணையில்லாத பாதுகாப்புக்

கைதிகள் 18000