பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பொழுது புலர்ந்தது

பிரஜா உரிமைகளைப் பறிப்பதிலேயே சர்க்கார் கவனம் செலுத்தி வந்தது. ஆனால் இங்கிலாந்தைப் பாருங்கள். இங்கிலாந்திலும் ஒரு பாஸிஸ்ட்கட்சி இருந்து வருகிறது, அதற்குத் தலைவர் ஸர் ஆஸ்வால்டு மாஸ்லி. பாஸிஸத்தை ஒழிப்பதற்காகவே நேசநாடுகள் அரும்பாடுபட்டு வங் தன. அதனல் மாஸ்லி சிறையில் தவிர வேறு எங்கே இருக்கமுடியும்? அப்படியே சிறையில்தான் வைத்திருந் தார்கள். ஆனல் சமீபத்தில் அவரை உள்நாட்டு மந்திரி விடுதலே செய்துவிட்டார். அது தவறு, மாஸ்லி பகிரங்க மாக பாஸிஸத்தை விட்டு விடுவதாகக் கூறவுமில்லையே என்று ஆங்கில நாடெங்கும் ஆட்சேபங்கள் அபரிமித மாகக் கிளம்பின. ஆனல் மந்திரியோ, ஒருவரை அவ ருடைய அபிப்பிராயம் தவறு என்பதற்காகச் சிறையில் வைக்கலாமா? அப்படிச் செய்தால் பிரஜா உரிமை பறிக் கப்பட்டு விடுமல்லவா? அப்பொழுது ஜனநாயக அரசாங் கம் என்பது ஏது? மந்திரிசபை தனக்குள்ள அதிகா ரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகு மல்லவா?” என்று கேட்டார்.

இப்படி அங்கே தேசத்தின் முதல் விரோதியாகக் கருதப்படுபவரை விடுதலை செய்யாதிருந்தால் அகியாயம் என்று கருதுகிறார்கள். ஆல்ை இந்த தேசத்திலோ பாஸிஸத்தை எதிர்க்கப் பலம் தாருங்கள் என்று கேட்கும் காந்தியடிகளே விடுதலேயும் செய்யமாட்டோம், விசாரணை செய்யவும் மாட்டோம் என்று சாதித்தார்கள். பாவி ஸத்தைப் பரப்பிவந்த மாஸ்லி பாஸிஸம் தவறு என்று கூரு திருந்தும் அவரை விடுதலை செய்துவிட்டார்கள். ஆனல் செய்யாத காரியத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்ளாதவரையில் காந்தியடிகளையும் காரியக் கமிட்டி யாரையும் விடுதலே செய்யமாட்டோம் என்று கூறினர்