பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பொழுது புலர்ந்தது.

இவ்விதமாக தேசத்தில் ஜனங்களின் நலம் ஒன்றே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்ட தலைவர்கள் சிறை யில் இருக்கிறார்கள். பஞ்சம் வாட்டி வருகிறது. பாது காப்புச் சட்டம் பிரஜா உரிமைகளை வேட்டையாடி வருகிறது. என்ன செய்வது? நியூ ஸ்டேட்ஸ்மென் என்னும் லண்டன் பத்திரிகை தேசிய சர்க்கார்தான் உணவுப் பிரச்னையைத் தீர்த்து வைக்கமுடியும் ‘ என்று கூறியதுதான் காரியம்.

ஆதலால் ஒரு கட்சியும் சேராத தலைவர்களுடைய மகாநாடு அரசியல் சிக்கல் சம்பந்தமாகப் பேசவும், காந்தி யடிகளைக் கண்டுபேச அனுமதி பெறவும் வேண்டி வைஸி ராயை 1-4-43ல் பேட் டி காண விரும்பி அவர்க்கு எழுதி ர்ைகள். அவருடைய விருப்பப்படி தங்கள் அறிக்கையை அவருக்கு அனுப்பியும் வைத்தார்கள். அவர் சரி நீங்கள் வரலாம், ஆல்ை நீங்கள் அறிக்கையைப் படித்ததும் என்னுடைய பதிலைப் படிப்பேன், அவ்வளவுதான் உடனே நீங்கள் போய்விட வேண்டியது, விவாதம் ஒன்றும் கிடையாது என்று பேட்டி காணும் முறையைத் தெரிவித்தார். அப்படியால்ை நாங்கள் வரவில்லை, உங்கள் பதிலே அனுப்புங்கள் என்று எழுதி வைஸி ராயின் பதிலேப் பெற்றார்கள்.

இவர்கள் அறிக்கையில்-சமரஸம் செய்ய வேண்டி யது அவசரம், அதற்குக் காந்தியடிகளைக் கண்டு பேச வேண்டியது அவசியம், அதற்கு நீங்கள் சம்மதியா விட் டால் சர்க்காருக்கு முட்டுக்கட்டையைத் தீர்க்க எண்ண மில்லை என்றே ஏற்படும்-என்று கூறியிருந்தார்கள்,

அதற்கு வைஸி ராய்-காந்தியடிகளும் காங்கிரஸ் கமிட்டியாரும் ஆகஸ்டு தீர்மானத்தை ரத்து செய்து தங்களால் ஏற்பட்ட அட்டுழியங்களைக் கண்டித்தால்