பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பொழுது புலர்ந்தது


அப்பொழுது நம்மை யார் கவனிக்கப் போகிறார்கள் ‘ என்று கூறினர்.

ஆதலால் கலகக்காரர் என்றாலும் காந்தியடிகளுடன் பேசித்தான் ஆகவேண்டும். எத்தனை ஜின்னுக்கள் அணை கோலிலுைம் காங்கிரஸ் வெள்ளத்தைத் தடுத்து பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்றி விடமுடியாது. ஆனல் ஆசைமிகுந்து விட்டால் அறிவு தோன்றாதல்லவா? வீழ்ச்சி அடையப் போகிறவன் அதற்குக் காரணமான கர்வத்தைப் பெற்றே விடுவான் என்னும் கிறிஸ்துவ வேதமொழி உண்மைதானே ?

வீடு தீப்பற்றி எரியுதே, என்ன செய்யலாம் என்று மிதவாதத் தலைவர்கள் கவலையுற்று காரியங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் ஜின்ன சாகேப் என்ன செய் தார் ? இந்துக்களா முஸ்ம்லிகளா அதிகநாள் அடிமையா யிருப்பவர்கள் என்னும் பெரியதோர் விஷயத்தை ஆராய்ச்சி செய்து இந்துக்கள் 800 வருஷகாலம் முஸ்லிம் களின் அடிமைகளாகவும் 200 வருஷகாலம் பிரிட்டி வடிார்க்கு அடிமைகளாகவும் இருக்க, முஸ்லிம்கள் 200 வருஷகாலமே அடிமைகளாய் இருக்கிரு.ர்கள் என்று சரித்திரத்துக்கு விரோதமான அரிய முடிவை உலகுக்கு வழங்கினர். எத்தனே காலம் அடிமையாயிருந்தாலும் அடிமை அடிமைதானே. நஞ்சு கொல்வதற்கு ஒரு துளி போதாதோ ஒரு நாழி வேண்டுமோ?

ஜின்ன சாகேப் டெல்லியில் நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் காந்தியடிகள் என்னுடன் பேச விரும்பிளுல் எனக்குச் சந்தோஷமே, எனக்கு நேரே கடிதம் எழுத லாம், யாரும் தடுக்கத் துணியமாட்டார்கள் என்று கூறினர்.

அதன்பின் சர்க்கார் காந்தியடிகள் ஜின்னவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ஆல்ை தாங்கள் அதை ஜின்ன