பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜின்னவின் போக்கு 143

பிரதிநிதியிடம் ஆறினர். அதைக் கண்டதும் முஸ்லிம் அறிஞர் லத்தீப் சாஹேப் அப்படியானல் பாக்கிஸ்தான் என்பது 500 சமஸ்தானங்களோடு 501வது சமஸ்தான மாக யிருக்கும், அவ்வளவுதானே ? அதற்குமேல் என்ன அந்தஸ்து உயர்வு ? என்று கேட்டார்.

மகாத்மா காந்தியடிகள் விடுதலை அடைந்த பின்னர் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் காந்தியடிகளைக் கண்டு பேசி காங்கிரசுடன் ஒன்று சேரும்படி ஜின்ன சாஹேபை வேண்டிக்கொண்டு வந்தார்கள். காந்தியடிகள், ஜின்ன சாஹேபைக் கண்டு பேச விரும்புவதாக சிறையிலிருந்து எழுதிய கடிதத்தை ஜின்னவிடம் சேர ஒட்டாமல் சர்க் கார் தடுத்துவிட்டார்களே, அந்தக் கடிதத்தை காந்தியடி களின் காரியதரிசி இப்பொழுது பிரசுரித்தார். ஆனல் ஜின்ன சாஹேப் ஒரு வார்த்தை கூடக்கூருமல் மெளனம் சாதித்தார்.

முஸ்லிம்களில் ஒரு வகுப்பாராகிய அஹ்ரார் களுடைய மகாநாடு டெல்லியில் கடந்தது. அதற்கு லட்சம் முஸ்லிம்கள் பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு போனர்கள். அந்தப் பிரம்மாண்டமான கூட் டத்தில் முஸ்லிம் லீக் முஸ்லிம்களின் தனிப்பிரதிநிதி அன்று என்பதைத் தெளிவாக்கினர்கள்.

அப்படியே தேசிய முஸ்லீம் மஜ்லிஸ் என்னும் புதிய ஸ்தாபனமும் தோன்றி வேலைசெய்ய ஆரம்பித் தி.து. அநேக முஸ்லிம்கள் ஜின்னுவிடம் காங்கிர சுடன் ஒன்று சேரும்படி வேண்டிக்கொள்வது ஒருபுறம் இருக்க இன்னும் அநேக முஸ்லிம்கள் காந்திஜியிடம் லீகைக் கவனிக்கவேண்டாம் என்று வேண்டிக்கொண்டு வந்தார்கள்.