பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பொழுது புலர்ந்தது

தற்காக மகாத்மா காந்தியடிகள் தமது அஹிம்சா தர்மத் தையுங்கூட ஒதுக்கி வைத்துவிட்டு அரசாங்க யுத்த முயற்சிக்கு உதவிசெய்ய முன்வந்திருக்கிருரே, இது போல் செய்யக் கூடிய இராஜதந்திரிகள் எத்தனைபேர் மேட்ைடில் உண்டு?” என்று எழுதியது.

ஆல்ை வைஸி ராயோ காந்தியடிகளின் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் எழுதிய பதிலின் சார மாவது :

சர்க்காருக்கும் அரசியல் சமரலம் ஏற்படவேண்டும் என்பதில் ஆவல்தான். ஆனல் கீழ்கண்ட காரணங்களால் காந்தியடிகளின் யோசனையை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை :

(1) யுத்தத்துக்குப் பின்னர்தான் பரிபூரண சுதந் திரம் வழங்கப்படும், அதுவும் முக்கியமான கட்சிகள் எல் லாம் ஒப்புக்கொள்ளக் கூடிய அரசியல் அமைப்பு நிர்மா னிக்கப்பட்ட பின்னர்தான்.

(2) தேசிய சர்க்கார் அமைக்க வேண்டுமானுல் இப் பொழுதுள்ள சட்டத்தில் மாறுதல் செய்தாக வேண்டும், அது யுத்த சமயத்தில் சாத்தியமில்லை.

(3) விவில் கிர்வாகம், இராணுவ நிர்வாகம் என்று பிரிக்க முடியாது ; இரண்டு கிர்வாகமும் யுத்த சமயத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் வசமே இருக்க வேண்டியது அவசிய மாகும்.

(4) இப்பொழுதுள்ள அரசியல் முறையிலேயே ஜனப்பிரதிநிதிகளைக் கொண்ட சர்க்கார் ஏற்படுத்தலாம், ஆல்ை அதுவும் புதிய அரசியல் கிர்மாணம் சம்பந்த மாக முக்கியமான கட்சிகளிடையே ஒற்றுமை உண்டா ல்ைதான்.

(5) யுத்தச்செலவு பிரிட்டிஷ் சர்க்கார்க்கும் இந்திய சர்க்கார்க்கும் இடையிலுள்ள விஷயமாகும், அதில்