பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து முஸ்லிம் பிரச்னை 153

நியாயமான வழிகளில் எப்படி எல்லாம் திருப்திப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் திருப்திப்படுத்த முயன்று வந்தார். ஆல்ை முஸ்லிம்லீக் அதுவேண்டும், இது வேண்டும் என்று நாளுக்கு நாள் அதிகமாகக் கேட்டுக் கொண்டே வந்து, கடைசியில் 1940-ம் வருஷத்தில் லாகூ ரில் வைத்து காட்டை இரண்டாகப் பிரித்து முஸ்லிம் களுக்கும் தனி ராஜ்யம் கொடுக்கவேண்டும் என்று தீர் மானம் செய்ததும் காந்தியடிகள் அப்படியே ஸ்தம்பித் துப்போய்விட்டார்.

பிரிந்துபோக விரும்புகிறவர்களைப் பிரிந்து போக விடாமல் தடுக்கக்கூடாதுதான், ஆல்ை நாட்டை இரண் டாகப் பிளப்பது எவ்வளவு அடாதகாரியம், பாபமான செயல் என்று அபிப்பிராயப்பட்டார்.

ஆனல் ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரியார் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்தால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்றிருக்கும்பொழுது, முஸ்லிம்கள் விரும்பு வதுபோல் தனி ராஜ்யம் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று காங்கிரஸில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை ; காந்தியடிகள் கூறியவாறேதான் கூறிற்று. அதனுல் ராஜாஜி காங் கிரஸை விட்டு விலகிக்கொண்டு நாடெங்கும் பிரசாரம் செய்து தமது கருத்துக்கு ஆதரவு தேடலானர். அடிக்கடி ஜின்ன சாகிபைக் கண்டு பேசி அவருடைய கருத்தையும் அறிந்துகொள்ள முயன்று வந்தார்.

முஸ்லிம் லீக் நாட்டைப் பிரித்துத் தனி ராஜ்யம் கேட் கிறது. காங்கிரஸ் நாட்டின் ஒருமை குலேந்து போனல் பாதுகாப்புக்குப் பங்கம் உண்டாகும் என்று பயப்படு கிறது. காட்டின் ஒருமை குலையாமல் முஸ்லிம் ராஜ்யம் ஏற்படுத்த முடியாதா என்று ராஜாஜி யோசித்தார்.