பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி திட்டம் - 157

ராஜாஜி தமது திட்டத்துக்கு காந்தியடிகளின் சம் மதத்தைப் பெற்றதும் வெளியிட்டிருந்தால், நாட்டில் அவ. ருக்கு ஏற்பட்டிருந்த எதிர்ப்பும், அவர்மீது சுமத்தி வந்த பழிச் சொல்லும் அறவே நீங்கிவிடா விட்டாலும் அமோகமாகக் குறைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும் அவர் தமது சொந்த கெளரவத்தைப் பொருட். படுத்தாமல், திட்டம் பலன் தருவதற்கு ஏற்ற பருவம் வரும்வரை தமது கையைக் கட்டிக்கொண்டு இருந்த அவருடைய பொறுமையையும் தியாகத்தையும் இராஜ: தந்திரத்தையும் எல்லோரும் போற்றுவார்கள்.

திட்டம் வெளியானதும் முஸ்லிம் லீக் தானுக அதைப் பரிசீலனே செய்யும் என்று அநேகர் எதிர்பார்த். தார்கள். ஆனல் ஜின்ன சாகிப் அதை மகாத்மா அனுப் பினல் லீகின் முன் சமர்ப்பிப்பதாகக் கூறினர். அப்ப டியே அனுப்பப்பட்டது. அவர் லீக் கூட்டத்தில் அதை ஒப்புக்கொள்ள முடியாது என்று பல ஆட்சேபங்கள் எடுத்துரைத்தார். லீக் கவுன்ஸில் அது சம்பந்தமாக முடிவு செய்ய அவருக்கே சகல அதிகாரங்களையும் அளித்தது.

காந்தியடிகள் ஜின்ன சாகிப்புக்குத் திட்டத்தை அனுப்பியதோடு, அது சம்பந்தமாக அவருடன் கலந்து பேச விரும்புவதாகக் கடிதமும் எழுதினர். ஜின்ன சாகிப், அதற்குச் சம்மதித்து 1943 ஆகஸ்டு மத்தியில் சக்திக்கலாம் என்று பதில் எழுதினர்.

மகாத்மா காந்தியடிகள் தாமும் ஜின்ன சாகிபும் கலந்து பேசுவதன் மூலம் காங்கிரஸ்-லீக் ஒப்பந்தம் ஏற்படும்படி ஆண்டவன் தங்கள் இருவர்க்கும் அறிவும் ஆற்றலும் அருளுமாறு 1945 ஆகஸ்டு 9வ யன்று காடெங்கும் பிரார்த்தனேக் கூட்டங்கள் கடத்துமாறு: வேண்டுகோள் விடுத்தார். அப்படியே ஆகஸ்டு 9வ.