பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்திஜியின் திட்டம் 171

... - -

ளாய் இருப்பது பாதுகாப்புக்கு உகந்ததில்லை என்பதை யும் ஒப்புக்கொண்டிருந்தால் சமரஸம் ஏற்பட்டு சீக்கிர மாகச் சுதந்திரம்பெற ஏதுவாயிருக்கும். பிறர்க்கு பயம் வேண்டாம்

இப்படிக் காங்கிரஸும் லீகும்தானே சமரஸம் பேசு கின்றார்கள், இவர்கள் நம்முடைய நலன்களுக்கு பாதக மாக முடிவு செய்துவிட்டாலோ என்று மற்ற வகுப்பார் கள் பயப்பட்டார்கள். இடைக்கால சர்க்கார் ஏற்படுத் தும்போது எல்லாக் கட்சியார்க்கும் திருப்தியான முறையி லேயே ஏற்படுத்துவோம் என்று காந்தியடிகள் ஜின்ன சாகிபுவுக்கு எழுதியதையும் அவர் அதை ஒப்புக்கொண்ட தையும் மேலே கண்டோம்.

அதுபோலவே காந்தியடிகள் இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தம் இதர கட்சியார்களுடைய அங்கீ காரம் பெற்ற பின்னரே இடைக்கால சர்க்காரால் அமுல் நடத்தப்படும் என்று எழுதியிருப்பதும் பயத்தை நீக்கு வதா யிருந்தது.

சம்பாஷணை முடிந்தபின் காந்தியடிகள் பத்திரிகைப் பிரதிநிதிகள் மகாநாட்டில் “ ஒரே ஒரு இந்தியனுடைய நலனுக்கு மட்டுமே ஹானி உண்டாக்குவதாய் இருக் தாலும் நான் என்னை தேச விஸ்வாஸ் மில்லாதவன் என்றே கருதிக்கொள்வேன் ‘ என்று கூறியதும் எல் லோர்க்கும் தைரியத்தை அளிப்பதாயிற்று. அனேகர் காந்தியடிகள் சுதந்திரம் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் முன்பின் யோசியாமல் தேச ஒருமைக்கு விரோதமாக முஸ்லிம்கள் நியாயமில்லாமல் கேட்டாலும் அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்து விடுவாரோ என்று பயந்தார்கள். ஆனல் அந்த பயமெல்லாம் வீண் என்பதை காந்தியடிகள் நடந்துகொண்ட நடு கிலேமை முறையிலிருந்து அறிந்து கொண்டார்கள்.