பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிம்லா மஹாகாடு 187

பஞ்சாபில் ஐக்கியக்கட்சி மந்திரி சபையுமே நடைபெறு கின்றன. சிங்திலும் அஸ்ஸாமிலும் உள்ள மந்திரி சபைகள் காங்கிரஸ் ஆதரவைக் மொண்டே நடந்து வரு கின்றன. ஆதலால் இந்தியாவிலுள்ள சகல முஸ்லிம் களுக்கும் தானே ஏகப் பிரதிநிதி என்று முஸ்லிம் லீக் கூறுவது பொருங்தாது.

காங்கிரஸ் ஜாப்தா

காங்கிரஸ் காரியக் கமிட்டியார், காங்கிரஸிலும் முஸ் லிம் லீக்கிலும் இந்து மகாசபையிலும் உள்ள தலைவர் களில் மிகப் பெரியவர்களைப் பொறுக்கி எடுத்து அவர்க ளுடன் ஒரு பார்ஸி, ஒரு கிறிஸ்தவர், ஒரு சீக்கியர் ஆகிய வர்களையும் சேர்த்து ஒரு ஜாப்தா தயார்செய்து அதை வேவலிடம் சமர்ப்பித்தார்கள்.

ஆனல் முஸ்லிம் லீக் முஸ்லிம் அங்கத்தினர்களுடைய பேர்களே மட்டுமே கூறுவதாகவும் அந்தப்பேர்களே மாற்றா மல் அப்படியே வைசிருய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகவும் கூறிற்று. அத்துடன் லிக்கில் சேராத எந்த முஸ்லிமையும் சேர்த்துக்கொள்ளக் கூடாதென்றும் முஸ்லிம் வீக்குக்கு அனுகூலமாக வைசிராய் தம்முடைய விசேஷ அதிகாரத்தை உபயோகிக்க வேண்டுமென்றும் ஜின்ன வைசிராயிடம் கேட்டார். வைசிராய் இவ்விதம் கடந்துகொள்ள இணங்கவில்லை. அதன்மேல் முஸ்லிம் லீக் அங்கத்தினர் ஜாப்தா கொடுக்க மறுத்துவிட்டது.

அதன்பின் வைசிராய் தாமே முஸ்லிம்கள் ஜாப்தா ஒன்று தயார் செய்து அதை ஜின்னவிடம் காட்டினர். அதில் முஸ்லிம் லீக்கிற்கு 4 ஸ்தானங்கள் வழங்கப்பட் டிருந்தன. ஆனல் ஜின்ன வைசிராயின் ஜாப்தாவை ஏற். மறுக்கொள்ள மறுத்துவிட்டார்.