பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிம்லா மஹாகாடு 1892

காங்கிரஸின் வெற்றி

காங்கிரஸ் மகாசபையைப்பற்றிப் பிரிட்டிஷ் சர்க்கா ரும் முஸ்லிம் லீக்கும் கூறிவந்த அபவாதங்கள் தவரு. னவை என்று இந்த மஹாகாட்டில் தெளிவாக நிரூபிக்கப் பட்டன. காங்கிரஸ்காரர்கள் ஜப்பானியர் வரவை ஆத ரிப்பதாகப் பிரிட்டிஷ் சர்க்கார் கூறிவந்தார்கள். ஆனல் காங்கிரஸ் கமிட்டி இடைக்கால சர்க்காரில் சேர்ந்து ஜப்பானியரை முறியடிக்க உதவுவதாக இந்த மஹாகாட் டில் ஏற்றுக்கொண்டது.

காங்கிரஸ் அதிதீவிரமான தேசியக் கட்சியாயிருப்ப தால் அது எந்தவிதமான சமரசத்தையும் ஏற்றுக்கொள் ளாது என்றும் அதேைலயே அது கிரிப்ஸ் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்றும் பிரிட்டிஷ் சர்க்கார் கூறிவந்தார்கள். ஆனல் வேவல் திட்டத்தில் எத்தனையோ குறைகள் காணப்பட்ட போதிலும் அதைக் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள முன்வந்ததிலிருந்து பிரிட் டிஷ் சர்க்கார் கூறியது தவறென்று புலயிைற்று.

காங்கிரஸ் மகாசபை ஒரு இந்து ஸ்தாபனம் என்றே பிரிட்டிஷ் சர்க்காரும் முஸ்லிம் லீக்கும் கூறிவந்தன. ஆனல் வேவல் பிரபு காங்கிரஸின் தலைவரான மெளலான ஆஜாத்தை அழைத்ததிலிருந்து காங்கிரஸ் மகாசபை ஒரு தேசிய ஸ்தாபனம் என்று கிரூபிக்கப்பட்டது.

முஸ்லிம் லீக் தானே முஸ்லிம்களின் ஏகப்பிரதிநிதி என்று கூறிவந்ததும் தவறென்று இந்த மஹாகாட்டில் வெளியாகிவிட்டது. மஹாகாட்டில் காங்கிரஸ் முஸ்லிம் களும் லீக் முஸ்லிம்களும் இரண்டிலும் சேராத முஸ்லிம் களும் பிரஸ்ன்னமாயிருந்தார்கள். வைசிராய் வேவலும் லீகின் தனிப் பிரதிநிதித்வ பாத்தியதையை அங்கீகரிக்க வில்லை.