பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 195

ஆளுல் ஜப்பானிய சேனையானது மலேயாவை வச மாக்கிக்கொண்டு பர்மாவையும் கைப்பற்றிக்கொண்டது. மலேயா சர்க்கார் ஏமாந்து போனது போலவே பர்மா சர்க் காரும் ஏமாந்து போனர்கள். கவர்னர் அவசரம் அவசர மாக இந்தியாவுக்கு ஓடினர். பிரிட்டிஷ் தளபதி அலக் ஸாண்டரும் அவருடைய துருப்புக்களும் ஓடோடி மே மாதத்தில் இந்திய எல்லையைப்போய் சேர்ந்தன. அவர்கள் போகும் பொழுது ஜப்பானியர் கைவசமாகக் கூடாது என்று எண்ணி கடைகளையும் உணவுப் பொருள்களேயும் எண்ணெய்க் கிணறுகளையும் இதுபோல் வாழ்க்கைக்கு வேண்டிய வஸ்துக்களை எல்லாம் தீக்கிரையாக்கினர்கள். அத்துடன் பர்மாவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல விரும் பிய இந்திய மக்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க எவ்வித ஏற்பாடும் செய்தார்களில்லை. ஐரோப் பியர்களுக்கு மட்டுமே வசதிகள் செய்துகொடுத்தார்கள். இதை எல்லாம் பார்த்ததும் இந்திய மக்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் ஆங்கிலேயரிடமிருந்த மதிப்பு முழுவதும் மறைந்து போயிற்று. இந்தியர்களே ஒருவிதமாகவும் இங்கிலிஷ்காரர்களை ஒருவிதமாகவும் நடத்தியதைப் போல வேறு எதுவும் இங்கிலீஷ் சர்க்காரிடம் அதிகமான துவேஷத்தை உண்டாக்கவில்லை” என்று எட்கார் ஸ்கோ என்னும் ஆங்கில ஆசிரியரே கூறினர்.

இதற்குள் ஜாவா, சுமத்ரா, அந்தமான், பத்தான், சாலோமன், பலி ஆகிய வுேகள் எல்லாம் ஜப்பானியர் வசமாய்விட்டள. ஆதலால் இந்தியாவின் கீழ்கரையில் ஜப்பானியக் காக்குதல்கள் ஏற்படலாம், பெரிய நகரங் க%ள யெல்லாம் காலிசெய்துவிட வேண்டும் என்று பிரிட் டிஷ் பிரதம மந்திரி சர்ச்சில் பார்லிமெண்டு சபையில்

சு பிறர்.