பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 201

சமயம் வரும் போது முற்றிலும் இந்தியர்களுடைய தலைமையிலேயே போர்க்களம் செல்லும் என்பதை யும் அறிந்து இந்திய மக்கள் அனைவரும் பேருவகை

யடைவார்கள்.

தோழர்களே ! என்னுடைய வீரர்களே ! டில்லிக் குப் போகிருேம் ‘ என்பதையே உங்கள் போர்க்

கோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

நான் இன்பத்திலும் துன்பத்திலும் வெற்றியிலும் தோல்வியிலும் உங்களுடனேயே இருப்பேன். இப் போது நான் உங்களுக்குத் தரக்கூடியவை யெல்லாம் பட்டினி, தாகம், துன்பம், மரணம் ஆகியவைகளே. இந்தியா விடுதலே பெறுவதைக் காண நம்மில் யாருக் குக் கொடுத்து வைத்திருக்குமோ அறியோம். ஆனல் இந்தியா விடுதலை பெற்றால் அதுவே நமக்குப் போதும். இந்தியா விடுதலை பெறுவதற்காக நாம் கம்முடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் மனமுவந் தளிப்போம் ‘ என்று கூறி இந்திய தேசிய ராணுவத்துக்கு “ ஆஜாத் ஹிந்த் பெளx “ என்று நாமகரணம் செய் தார். அதன் பொருள் “ சுதந்திர இந்தியச் சேனை ‘ என்ப தாகும்.

அத்துடன் “ ஜே ஹிந்த் ‘ என்னும் மந்திரத்தையும் சிருஷ்டி செய்து வழங்கினர். இருபத்தைந்து வருஷங் கட்கு அதிகமாக இந்திய நாடெங்கும் முழங்கிவந்த ‘ வந்தே மாதரம்” என்னும் தேசீய மந்திரத்தை உப யோகியாமல் ஜே ஹிந்த் என்னும் புது மந்திரத்தை உண்டாக்கியதன் காரணம் யாது ?

சுமார் 50 வருஷங்கட்குமுன் வாழ்ந்திருந்த வங்க நாவலாசிரியர் தேசபக்தர் பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் “ வங்தே மாதரம்” என்னும் சொற்றாெ டரையும் வங்தே