பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திய தேசிய ராணுவம் 209

இருந்த தளபதிகள் அனைவரும் இந்தியர்கள்தான். அவர் கள் ஐரோப்பிய அமரிக்கத் தளபதிகளே யுத்தத் தந்திரத் தில் வென்று விட்டார்கள்.

நேதாஜி செய்த மற்றாெரு அற்புதம் யாதெனில் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் பார்ஸிக்கள் கிறிஸ்தவர்கள் எல்லோரையும் தேசீய மூவர்ணக் கொடியின் கீழ் ஒன்று சேர்ந்து இந்திய விடுதலைக்குப் போர் புரியும்படி செய் ததே யாகும்.

இ. தே. ரா. விசாரணை

1945 நவம்பர் மாதத்தில் இந்திய சர்க்கார் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஷா கவாஜ் கான், ஷேகல், தில்லான், என்ற மூன்று தளபதிகளே ராணுவக் கோர்ட் டின் முன் விசாரணைசெய்ய ஏற்பாடுசெய்தார்கள். அவர்கள் மீது கூறப்பட்டக் குற்றச் சாட்டுகள் இரண்டு.

1. பிரிட்டிஷ் மன்னரை எதிர்த்துப் போராடியது. 2. தேசிய ராணுவத்தை விட்டு ஒடிப் போனவர் களைப் பிடித்து வந்து கொலை செய்தது,

இரண்டாவது குற்றம் முதல் குற்றத்தில் ஒரு அம்ஸ்மே ஆனதால் அப்பொழுது விசாரிக்கப்பட்ட குற்றம் பிரிட்டிஷ் சர்க்காருக்கு விசுவாசமா யிருக்க வேண்டுமா அல்லது தாய்நாட்டுக்கு விசுவாசமா யிருக்க வேண்டுமா ? என்பதுதான்.

இந்த விசாரணை விஷயத்தை அறிந்ததும் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் எதிரிகளுக்கு வக்கீல்களாக இருக் கும்படி 17 பெரிய சட்ட நிபுணர்களே கியமித்தார்கள். அவர்களில் பிரதானமானவர்கள் புலாபாய் தேசாயும் பண்டித ஜவகர்லால் நேருவும் ஸர் தேஜ்பகதூர் சாப்ரூ வும் ஆவார்கள். ஆயினும் புலாபாய் தேசாயே விசா ாணேயை வெகு திறம்பட நடத்தி வெற்றிபெற்றார்.

563–14 =