பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜே. ஹிந்த் 217

இந்தவிதமாக நாடெங்கும் ஜனங்களும் ராணுவ வீரர்களும்,

நாமிருக்கும் நாடு நமதே என்றும்

நமக்கே அது உரிமையாம் என்றும் அறிந்து கொண்டார்கள்.

படித்தறியாத மிக ஏழைக் கிழவர்களுங் கூட,

துடித்தெழுந்து தம்மெலிந்த தோளைக் கொட்டித்

தொளை மிகுந்த கந்தலுடைச் சுருக்கிக் கட்டி

எடுத் தெறிய வேணுமிந்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே என்றென்றார்த்து

அடித்தறைந்து ஆவேசம் கொள்ள ஆரம்பித்துவிட் டார்கள்.

ஆயுதத்தின் அதிகாரம் அதற்கே அஞ்சி அடிபரவும் தாஸர்களுங்கூட இனிமேல் பிரிட்டிஷ் சர்க்கார் கிலக்கப் போவதில்லே, சுயராஜ்யம் வந்தேதிரும் என்று கண்டு கொண்டார்கள்.

இளேஞர்கள் எல்லோரும் இன்னமும் இந்தச் சின்னத்தனத்தில் ஏங்கிக் கிடந்திடத் தூங்குவமோ ?

என்று வீறுகொண்டு எழுந்தார்கள்.

மூன்று விஷயங்கள்

(1) 1942-ம் வருஷம் ஆகஸ்ட் மாதத்தில் உண்டான பொதுஜன எழுச்சியும் அதே சமயத்தில் மலேயாவில் அமைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவமும் இந்தியா வுக்கு சுதந்திரம் தேடும் முயற்சியில் வெற்றிபெறவில்லை என்பது உண்மைதான். ஆயினும் அவை பிரிட்டிஷ் சர்க்