பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230. பொழுது புலர்ந்தது

ஆதலால், எந்த விதத்திலும் பாக்கிஸ்தான் ஏற். படுத்துவதால் வகுப்புப் பிரச்னை தீர்ந்துவிடாது என்ற முடிவுக்கு வந்தோம்.

ஆட்சேபங்கள் : இவை தவிர, வேறு சில வெகு முக் கியமான ஆட்சேபங்களும் இருக்கின்றன.

(1) இந்தியாவைப் பிரித்தால், அகில இந்தியாவுக் கும் பொதுவாகவுள்ள போக்கு வரத்து, தபால், தந்தி வசதிகள் எல்லாம் தட்டுக் கெட்டுப்போய், இரண்டு பாகங்களுக்கும் பெருங் தீங்கு உண்டாகும்.

(2) இந்தியாவின் பாதுகாப்புக்கும் பிரிவினை கூடாது. சேனேயைப் பிரிப்பதால் பெருத்த அபாயம் நேரிடும்.

(3) சுதேச சமஸ்தானங்கள் பிரிட்டிஷ் இந்தியா வுடன் சேர்ந்துகொள்ளும் விஷயத்தில் சிரமம் ஏற்படும். (4) வடமேற்கு ராஜ்யத்துக்கும் வடகிழக்கு ராஜ் யத்துக்கும் 700 மைல் தூரமாகையால், அவைகளுக் கிடை யில் போக்குவரத்து கடத்த இந்துஸ்தான் தயவையே காடி கிற்கவேண்டியதாகும்.

(5) இரண்டு ராஜ்யங்களும் எல்லப் புறங்களில் இருப்பதால், அயல்காட்டுப்படை யெடுப்பை எதிர்ப்பதற் குத் தகுந்த அளவு பெரியனவாக இல்லை.

ஆதலால், இந்தியாவை இரண்டு தனி ராஜ்யங்க ளாகப் பிரிக்கக் கூடாது என்று முடிவு செய்கின் ருேம்.

ஆல்ை, இந்துக்களின் மெஜாரிட்டியால் தங்களுக்குக் கெடுதல் உண்டாகும் என்றுமுஸ்லிம்கள் பயப்படுகின் ருர்கள் என்பதில் சந்தேகமில்லை.