பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 241

யானத்தை ஏற்றுக்கொண்டால் கலக்கத்துக்குச் சிறி தளவு கூடக் காரணமில்லை என்பதை அறிந்து கொள்வார்கள் “

குறைகள

அதன்பின் காந்தியடிகள் துாதுகோஷ்டியாரின் திட்டத்தில் காணப்படும் மிக முக்கியமான குறைகளைக் குறித்து வேறொரு கட்டுரையில் எழுதினர். அதன் சாரம வருமாறு :

(1) தாது கோஷ்டியார் சிம்லாவில் சிறிது காலம் தங்கிவிட்டு தில்லிக்கு வந்து தங்கள் திட்டத்தை வெளி யிட்டனர். அப்படி யிருந்தும் இன்னும் மத்திய சர்க்கார் தேசீய சர்க்காராக மாருமலே தான் இருந்து கொண்டிருக் கின்றது. அவர்கள் திட்டத்தை வெளியிடு முன்னரே அத்தகைய அரசாங்கத்தை அமைத்து விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனல் அவர்கள் முதலில் திட்டத்தை வெளியிட்டுவிட்டு அதன் பிறகே இடைக்கால சர்க்கார் அமைப்பு விஷயமாக யோசனை செய்து வரு கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் உணவுப் பஞ்சத் தாலும் உடைப்பஞ்சத்தாலும் வாடி கிற்கும் இந்தச் சமயத்தில் இப்படிக் கால தாமதம் செய்யலாமா? இது தான் முதற் குறை.

(2) சமஸ்தானங்கள் சம்பந்தமாக இன்னும் சர்வாதி கார பீடப்பிரச்னே தீர்க்கப்படாமலே இருந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி கின்றுவிட்டதும் சர்வாதிகார பீடமும் கின்று போகும் என்று கூறுவது போதாது. சர்வாதிகார பீடம் இடைக்கால சர்க்கார் ஏற்படும் அன்றே ஒழிந்து போய்விடவேண்டும். அது சாத்தியப்படா விட்டால் சமஸ்தான ஜனங்களுடைய கன்மைக்காக மட்டுமே இரும். வ வேண்டும். அதற்காக அது இடைக்கால

503–16