பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 243

களேயே அமைப்பார்களானல் அப்பொழுதே அவர்கள் மீது குறை கூறுவோம். நாம் சந்தேகப்படுவதற்குக் காரணங்கள் இருந்தாலும், அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவதாக எண்ணுவதற்கான அறிகுறி யொன்றையும் காணுேம் ‘ என்று முடித்தார்.

காங்கிரஸ் தீர்மானம்

காங்கிரஸ் காரியக் கமிட்டியார் மே 24-ம் தேதி யன்று புது தில்லியில் கூடி துாதுகோஷ்டியாரின் திட்டத்தை ஆராய்ந்து ஒரு தீர்மானம் செய்தார்கள். அதன் சாரம் வருமாறு :

லட்சியம் __

(1) (அ) பரிபூரண சுதந்திரம், (ஆ) பலம் பொருந்திய மத்திய சர்க்கார், (இ) பரிபூரணமான மாகாண சுயாட்சி, (ஈ) பரிபூரணமான வளர்ச்சிக்கு வேண்டிய ஜீவாதார மான பிரஜா உரிமைகள் சகலர்க்கும் கிடைத்தல், (உ) பிற சமூகங்கட்கு கேடு செய்யா வண்ணம் சகல சமூகங்களும் தங்கள் இஷ்டம் போல் வாழ்வதற்குரிய உரிமை பெறுதல் என்ற காங்கிரஸ் லட்சியங்களுக்கு முரண்பட்டிருப்பதைக் காண வருத்தமாயிருக்கிறது.

அரசியல் நிர்ணய சபை

(2) அாவியல் அமைப்பை வகுக்கும் விஷயத்திலும் அதை அமுல் நடத்தும் விஷயத்திலும் அரசியல் நிர்ணய

சபையே இறுதியாக முடிவு செய்யக்கூடிய சகல ராஜ்யாதிகாரமுடைய ஸ்தாபனமாகக் கருதப்பட வேண் டும்.

(3) சமூகங்களைப் பொறுத்த முக்கியமான

விஷயங்கள் பெரிய சமூகங்களுடைய மெஜாரிட்டித் ர்ேமான க்கைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும்