பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பொழுது புலர்ந்தது

கிற்கமாட்டோம், ஆல்ை மற்ற அபேட்சகர்களுக்கு ஒட் டுச் செய்வோம் என்று அபிப்பிராயம் தெரிவித்தார்.

அதைக் கண்டதும் காந்தியடிகள்-” இவருடைய கியாயமற்ற வாதமானது தூதுகோஷ்டியாருடைய அந்த ரங்க சுத்தியை கம்பமுடியாமற் செய்கிறது. ஐரோப்பியர் களுக்கு சட்டசபைகளில் இருக்க உரிமை யேது? அவர் கள் வங்காளச் சட்டசபையிலும் அஸ்ஸாம் சட்டசபையி லும் இருந்து இதுவரை சாதித்த தென்ன ? இந்துக்களே யும் முஸ்லிம்களையும் பிரித்து வைக்கும் புண்ணிய கைங் கரியத்தைத் தவிர வேறென்ன செய்தார்கள் ? இப் பொழுது அரசியலை வகுக்கும் காரியத்திலும் அவர்கள் தாராளமாக உதவி செய்ய வருகிறார்களாம். இந்தியாவி லுள்ள கோடானுகோடி வாயில்லாப் பூச்சிகளின் சங்கை நெரிப்பதைத் தவிர வேறென்ன உதவிசெய்துவிடப் போகிறார்கள் ? இந்தத் துன்பங்கள் இன்னும் எத்தனே நாட்களுக்கு நீடித்திருக்குமோ? இந்த அதிேயை நீக்கா விட்டால் எப்படி அரசியல் கிர்ணய சபை என்னும் தோணி வெற்றிகரமாகப் பிரயாணம் செய்ய முடியும்?” என்று ஹரிஜன் பத்திரிகையில் எழுதினர்.

ஐரோப்பியர்களுக்கு இவ்விதம் அரசியல் கிர்ணய சபைக்கு நடக்கும் தேர்தலில் ஒட்டுச் செய்யவோ அபேட் சகராக கிற்கவோ துரதுகோஷ்டித் திட்டம் உரிமை அளிக்கின்றதா என்று இந்தியாவிலுள்ள மிக முக்கிய மான சட்ட நிபுணர்களாகிய சிவ நாராயணன், கே. எம். முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர், பகதூர்ஜி, டேக்சந்த் ஆகியவர்களுக்கு எழுதிக் கேட்டார். “ இந்தியாவுக்கு அரசியல் வகுக்கும் உரிமை இந்தி யர்களுக்கே உண்டு, இந்திய ரல்லாதவர்களுக்குக் கிடை யாது, அதல்ை ஐரோப்பியர்கள் அரசியல் கிர்ணய சபைத்