பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் போர்முறை 263

பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்த்துப் போராட்டம் நடத் தப் போவதாகக் கூறுகிறார்களே, உண்மையிலேயே அவர்களுக்குப் பிரிட்டிஷ் சர்க்காரை எதிர்த்துப் போராட தைரியமுண்டா ? இதற்குமுன் என்றேனும் போராடி யிருக்கிறார்களா ? போராடப் போவதாகப் பல முறை பயமுறுத்தி யிருக்கிறார்கள். அத்துடன் சரி அவர்களுடைய போராட்டம் எல்லாம். அவர்கள் போராட விரும்புவதெல்லாம் காங்கிரஸ்காரர்களையும் அவர்கள் ஆதரிக்கும் தேசீய முஸ்லிம்களேயும்தான் என் பதில் சந்தேகம் கிடையாது.

வங்காளத்தில் முஸ்லிம் லீக் பிரதம மந்திரியா யிருக்கும் ஜனப் சுஹர்வர்த்தி “ காங்கிரஸ்காரர்கள் இடைக்கால சர்க்கார் அமைத்தால் காங்கள் வங்காளத் தில் பூரண சுதந்திரத்தை ஸ்தாபித்துக் கொள்வோம் “ என்று கூறினர்.

இந்தியாவில் முதன் முதலாக சுதந்திரப் போரை நடத்திய மாகாணம் வங்காளம்தான். ஆதலால் வங்கா ளத்திலேயே முதன் முதலாகப் பரிபூரண சுதந்திரம் ஸ்தாபிக்கப் போவது பொருத்தமே யாகும். ஆனல் ஜனப் சுஹர்வர்த்தி ஸ்தாபிக்கப் போவதாகக் கூறிய சுதந்திரம் எத்தகையது என்பது ஆகஸ்ட் 16க் தேதி கல்கத்தாவில் நடந்த சம்பவங்களிலிருந்து தெளிவாக விளங்கிவிட்டது.

கல்கத்தா அமளி

வங்காளத்திலும் சிந்திலும்தான் முஸ்லிம்லீக் மந்திரி சபைகள் நடைபெறுகின்றன. அதனல் அந்த இரண்டு மாகாணங்களிலும் மந்திரி சபைகள் ஆகஸ்ட் 16-ந் தேதி விடுமுறை நாள் என்று அறிவித்தார்கள்.