பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 பொழுது புலர்ந்தது

இச்சையற்ற கர்மயோகி இணையில் ராஜதந்திரி

எங்கள் ராஜாஜியென்று எவரும்போற்றும் தமிழனும்

சேர்ந்துசெய்யும் ராஜரீகம் நேர்ந்தஇந்த சேதிதான்

ஜெகதலத்தை மகிழ்வுகொள்ளச் செய்யவந்த புதுமையாம் மனிதருக்குள் மனிதனென்னும் மகிமைபெற்ற மகரிஷி

மண்டலத்தில் கண்டிலாத தொண்டுசெய்யும் மன்னவன் புனிதருக்குள் புனிதன் என்ற வாழ்க்கையுள்ள புண்ணியன்

புண்எவர்க்கும் எண்ணிடாத கண்ணியத்தின் புகலிடம் தனியன்கர்ம பக்திராஜ ஞானயோகத் தவசியாம்

தலைவன்.எங்கள் காந்திஎன்ற கற்பகத்தின் தருவின் ஓர் கணிவிழுந்த தென்றுசொல்லத் தக்கதிந்தக் காட்சியே !

கடவுள்என்ற பொருளும்இன்று களிமிகுந்து துள்ளுதால் !

என்று அழகாகப்பாடி ஆனந்தக் கூத்தாடுகின்றார்,

ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் மகஞ்சதரோ நாக ரிகம் உச்சங்லையில் இருந்த காலத்தில் இந்தியா முழுவதும் தமிழரே ஆண்டு வந்ததாக சரித்திர ஆசிரியர்கள் கூறு கிறார்கள். அதற்குப் பின்பு அநேக நூற்றாண்டுகளாக அப்படியே இருந்ததாக கம்முடைய பழைய தமிழ் நூல் கள் கூறுகின்றன. இப்போது மறுபடியும் தமிழன்னை டில்லியில் அரியாசனத்தில் தன்னுடைய சகோதரி களுடன் சரிசமானமாக வீற்றிருக்கும் தெய்வீகக் காட்சி யானது சகல தமிழ் மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சி யைத் தருவதாகும். இனிமேல்,

ஏழைஎன்றும் அடிமைஎன்றும் எவருமில்லை ; ஜாதியில்

இழிவுகொண்ட மனிதரென்பவ ரிந்தியாவில் இல்லையே ;

வாழிகல்வி செல்வமெய்தி மனமகிழ்ந்து கூடியே

மனிதர்யாரு மொருநிகர் ஸமானமாக வாழ்வமே.