பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பொழுது புலர்ந்த து

விரைந்து செல்வதைக் கண்டதும் ஆகா, அதிகாரத்தில் நமக்குப் பங்கில்லையே, ஏமாந்து போனேமே” என்று எண்ணியே இடைக்கால சர்க்காரில் வந்து சேர்ந்தார்கள். “இங்கு சொல்லாமலே அறிந்து கொள்ளக்கூடிய காரணங்கள் ” என்று ஜின்ன சாகேப் கூறுகிருரே அந்தக் காரணங்கள் எவை? இடைக்கால சர்க்கார் நடைபெருமல் உள்ளே இருந்து முட்டுக்கட்டை போடு வதுதான் உள்ளே வருவதன் நோக்கமோ? அந்தக் காரியம் இனிமேல் பலிக்காது. பலிக்கவிட முடியாது.

ஜின்ன சாகேப் இடைக்கால சர்க்காரில் முஸ்லிம் வீக் சார்பாக சேரும் ஐந்து மெம்பர்களின் பெயரையும் வைசிராய்க்கு அனுப்பிவைத்தார். அதன்மேல் அவர் களுக்கு எந்த இலாக்காக்களைத் தருவது என்ற விஷயம் ஆலோசிக்கப்பட்டது. o

ஜின்ன எப்படியும் உள்நாட்டுப் பாதுகாப்பு இலாகா வாவது முஸ்லிம் லீகுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

ஆனல் அவர் பண்டித ஜவஹர்லால் நேரு தம்முடன் ஒத்துழைக்குமாறு அழைத்தபொழுதே வந்திருந்தால் அந்த இலாகா முஸ்லிம் லீகுக்குக் கிடைத்திருக்கும். முன்னல் காங்கிரஸின் சார்பாக ராஜாஜி, ஜின்ன சாகேபே தேசிய சர்க்காரின் பிரதம மந்திரியாகவே இருக்கட்டும் என்று கூறினர் அல்லவா? இரண்டு கட்சியும் ஒத் துழைப்பதால்ை எந்தக் கட்சி எந்த இலாக்காவை நடத் தில்ை என்ன ? ஆல்ை இப்பொழுது ஜின்ன சாகேப் உடன்பிறந்த சகோதரருடைய அழைப்புக்கு இணங்கா மல் அடிமையாக்க வந்த ஐரோப்பிய வைசிராயின் அழைப் பின் பேரிலேயே வந்திருப்பதால் எப்படி இந்த முக்கிய மான இலாகாவை லீகரிடம் ஒப்படைக்க முடியும் ?