பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பொழுது புலர்ந்தது

(2) டொமினியன் அந்தஸ்தை எவ்வளவு சீக்கிர மாகப் பெறச்செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகப் பெறச் செய்வதாக உறுதி கூறுகிறார்கள்.

(3) யுத்தம் முடிந்ததும் சகல கட்சியாருடைய சம்ம தத்துடன் 1935ம் வருஷத்து அரசியல் சட்டத்தில் கண்ட சமஷ்டித் திட்டத்தில் அவசியமான மாறுதல்கள் செய் வார்கள்.

(4) தற்சமயம் வைஸி ராயின் நிர்வாக சபையில் அரசியல் கட்சிகளில் முக்கியமானவற்றின் தலைவர்களில் சிலரைச் சேர்த்துக் கொள்வார்கள்.

பிரியப்பட்டால் பிரிந்து கொள்ளலாம் என்று கூறுவ தால் பரிபூரண சுதந்திர லட்சியத்தை ஒப்புக்கொள்வதாக எண்ணலாம், அந்த மட்டுக்கும் விசேஷம்தான்.

ஆல்ை அது எப்பொழுது சித்தியாகும்? அவசியத் துக்கு அதிகமாகக் காலதாமதம் செய்யமாட்டோம் என்று சர்க்கார் கூறுகிறார்கள். அந்த அவசியமான கால எல்லையை நிர்ணயம் செய்வது யார்? அந்த அவசியமான காலம் ஒரு வருஷமாகவும் இருக்கலாம், ஒரு யுகமாகவும் இருக்கலாம் அல்லவா? ஏன் ஒரு தேதியை இப்பொழுதே குறிப்பிட்டு விடக்கூடாது?

சகல கட்சியாரும் சம்மதிக்கவேண்டும் எவ்வித மாற் றமும் செய்வதற்கு என்று கூறுகிறார்களே, இதற்குமுன் எத்தனையோ அரசியல் சட்டங்களே இயற்றி யிருக்கிறார் களே, அவைகளே எல்லாம் சர்வகட்சி சம்மதம் பெற்றுத் தான் செய்தார்களோ? சமஷ்டி முறையைப்பற்றி கூறு கிருரே, அதையேனும் எல்லாக் கட்சியாரும் ஏற்றுக் கொண்டார்களோ?

பரிபூரண ஒற்றுமை ஏற்படுகிற எந்த தேசத்திலும் சுதந்திரம் ஏற்பட்டதில்லையோ? சுதந்திரம்தான் ஒற்று