பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பொழுது புலர்ந்தது

-

இந்த மூன்று பேரும் கூறியதிலிருந்து இந்திய மக்கள் எண்ணியது சரிதான் என்று தோன்றுகிறது அல்லவா? ஆயினும் அறிவாளிகள் பலர், அவர்கள் கூறுவது உண்மை தான், ஆல்ை ஏகாதிபத்திய வாதிகளுடைய அந்தரங்க எண்ணங்களே யார் அறிவார், அவர்கள் எப்படி வேண்டு மாலுைம் தங்கள் இஷ்டம்போல் வியாக்கியானம் செய்வ தில் சமர்த்தர்கள் ஆயிற்றே என்று சந்தேகங்களைக் கிளப் பினர்கள்.

அகில இந்திய காங்கிரஸ் காரியதரிசி ஆச்சாரிய கிரு பாளனி சாஸனத்தில் கண்ட எட்டுக் கொள்கைகளும் பொதுவாகவும் தெளிவில்லாமலுமே உள, ஆலுைம் சாஸனத்தைச் செய்தவர்கள் மனம் வைத்தால் அதை நல்ல மாதிரியாக கடத்தி வைக்கலாம். ஆனல் இந்தியா வுக்கு நன்மைசெய்யவேண்டும் என்ற மனம் சர்ச்சிலுக்கு உண்டா என்று கேட்டார்.

அது உண்மைதான், அவருக்கு இதுவரை இருந்த தில்லை, ஆல்ை இனிமேல் எப்படியோ? 1935-ம் வருஷத்து அரசியல் சட்டம் நமக்குப் பிரமாதமான நன்மைகள் எது வும் செய்யக் கூடியதாயில்லை, அதனால் நமக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் காட்டில் பிளவுகள் ஏற்பட்டதுதான். ஆனல் அந்தச் சட்டங்கூட வேண்டாம் என்று ஒரே பிடி வாதமாக பார்லிமெண்டில் எதிர்த்த கூட்டத்தார்க்கு தலைவராய் இருந்தவர் சர்ச்சிலே ஆவார். அப்பொழுது அவர் ‘ பிரிட்டிஷ் அரசருடைய கிரீடத்தில் அதிக விலை யுள்ளதும் பிரகாசமுள்ளதுமான இரத்தினம் இந்தியா தானே, அதை காங்கள் எப்படி விட்டுவிட முடியும், இந்தியா போய்விட்டால் இங்கிலாந்து வல்லரசாய் இருப் பது எப்படி ‘ என்று கேட்டார்.

அவர் இந்தியா விஷயத்தில் மட்டும்தான் அப்படி என்று எண்ணவேண்டாம், இங்கிலாந்துக்கு அடிமையா