பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

கிரிப்ஸ் தோல்வி

1942 ஜனவரி பெப்ரவரி இரண்டு மாதங்களில் ஜப்பான் மலேயாவையும் பர்மாவையும் பிடித்துக் கொண்டதோடு வங்காளக் குடாக்கடலிலுள்ள அந்த மான் தீவுகளையும் கைப்பற்றிக்கொண்டது. ஆகவே அந்தக் கடல் ஜப்பான் குளமாகிவிட்டது. பிரிட்டிஷ் கப்பல்கள் அதில் தலைகாட்ட முடியாமல் ஆகிவிட்டது. எந்த நிமிஷம் ஜப்பான் இந்தியாவைத் தாக்குமோ என்ற பயம் இந்தியாவிற்போலவே இங்கிலாந்திலும் அமெரிக்கா விலும் சைவிைலும் உண்டாய்விட்டது.

காங்கிரஸ் கமிட்டியார் பிரிட்டிஷ் சர்க்காருடைய மனப்பான்மை இன்னும் மாரு விட்டாலும் இந்தச் சமயம் விலகி நிற்கக்கூடாது என்று எண்ணி நாங்கள் காந்தி யடிகளேயும் அஹிம்லா தர்மத்தையும் விட்டுப்பிரிந்து, யுத்த முயற்சியில் ஈடுபடத் தயார், எங்களுக்கு அதற் கான அதிகாரத்தைத் தாருங்கள் என்று கேட்டார்கள்.

சாப்ரு, சாஸ்திரியார் போன்ற இருபது மிதவாதத் தலைவர்கள் இப்பொழுதாவது வைஸ்ராய் கிர்வாக சபையை இந்திய மயமாக்கி சகல விஷயங்களேயும் அவர் கள் கையில் கொடுத்து ஜப்பானே எதிர்த்துத் தடுக்க சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்று அமெரிக்காவுக்குப் போயிருந்த சர்ச்சிலுக்குத் தந்தி கொடுத்தார்கள். அதை யொட்டி கட்சிப்பற்றில்லாத தலைவர்கள் மகாநாடும் தீர்மானம் கிறைவேற்றி சர்க்காருக்கு அனுப்பிவைத்தது.